மத்திய பிரதேசத்தில் ஒரு அன்னை தெரசா- 3000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவிய பாடகி

0
44
- Advertisement -

மத்திய பிரதேசத்தில் 3000 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு பாடகி ஒருவர் உதவி இருக்கும்
தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே பிரபலங்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் செய்யும் உதவி அனைவரும் அறிந்ததே. இவரிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் மாற்றம் என்ற அறக்கட்டளையின் மூலம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். இவர் உடன் எஸ் ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா ஆகியோரும் இணைந்து உதவி செய்து கொண்டு வருகிறார்கள். மேலும், கலக்கப்போவது யாரு பாலா செய்த உதவிகள் எல்லாம் மிகப்பெரியவை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் செய்ய முடியாததை கூட பாலா செய்து கொண்டிருக்கிறார். அதே போல் மறைந்த நடிகர் விஜயகாந்த் கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்.

- Advertisement -

பிரபலங்கள் சமூக சேவை:

அவர் இல்லை என்றாலும் தற்போது கூட அவர் அலுவலகத்திற்கு பசி என்று வருபவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பாடகி ஒருவர் செய்திருக்கும் உதவி தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் பிரபலமான பாடகியாக இருக்கும் பாலக் முச்சல் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை இவர் ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் 3000 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார்.

பாலக் முச்சல் செய்யும் உதவி:

இதை இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே செய்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக இவர் பேட்டியில், நான் என்னுடைய ஏழு வயதிலிருந்தே என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறேன். திருமணத்திற்கு பிறகு என்னுடைய கணவருடன் இணைந்து நான் ஏழை எளிய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவுகிறேன். இந்த சேவை செய்ய என்னுடைய கணவர் எனக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். குழந்தைகளுடைய அறுவை சிகிச்சை பற்றி என்னுடைய கணவரிடம் பேசும்போது அவர் ஆர்வமாக கேட்பார்.

-விளம்பரம்-

பாலக் முச்சல் பேட்டி:

அதுமட்டுமில்லாமல் பணம் திரட்டுவது, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறித்து எல்லாம் சொல்லுவார். இதை அவர் செய்யும்போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. கச்சேரியில் பாட்டுப்பாடி அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கிறேன். இதுவரை 3000 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதை நான் ஒரு மைல் கல்லாகவே பார்க்கிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன்.

இதய அறுவை சிகிச்சை குறித்து சொன்னது:

பெற்றோர்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத குழந்தைகளுக்கு இது ஒரு உதவி. இந்த உதவியை செய்வதை நான் கடமையாக பார்க்கிறேன். உதவி செய்வதற்காக கடவுள் என்னை படைத்துள்ளார் என்று நினைக்கிறேன். அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலருமே பாடகி பாலக் முச்சிலை பாராட்டியும் அவருடைய சேவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement