கரீனா கபூரிடம் இருந்து பச்சையாக காப்பி அடித்த சமந்தா.

0
35646
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் சமந்தாவுக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

Image result for kareena kapoor babo saree

- Advertisement -

இந்நிலையில் தமிழில் 2018-ம் ஆண்டு விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். பின் அங்கும் இந்த படம் நல்ல வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தனும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து உள்ளனர். தமிழில் 96 படத்தை எடுத்த பிரேம் குமார் தான் ஜானு படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த ஜானு திரைப்படம் தெலுங்கில் வெளியாகி உள்ளது.

ஜானு திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் நடிகை சமந்தா ஜானு திரைப்படத்தின் பெயர் பதிக்கப்பட்ட புடவை ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. 96 படத்தில் திரிஷாவின் மஞ்சள் நிற குர்தா மற்றும் நீல நிற ஜீன்ஸ் எப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததோ சமந்தாவின் இந்த ஜானு புடவையும் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால்,. சமந்தாதாவின் இந்த புடவையை போலவே பிரபல இந்தி நடிகையான கரீனா கபூர் நடித்த ‘பேபு’ என்ற திரைப்படத்தின் போது சமந்தா அணிந்திருக்கும் அதே புடவையை அணிந்துள்ளார் என்று நெட்டிசன்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தை பார்த்த பலரும் கரீனா கபூரிடம் இருந்து சமந்தா காப்பி அடித்துள்ளார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement