-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘அவர உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்’, அர்ச்சனா கேட்ட கேள்வி. கண்ணீர் விட்டு அழுத சைந்தவி

0
90

தொகுப்பாளினி அர்ச்சனா கேட்ட கேள்வியால் பாடகி சைந்தவி அழுது இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

வழக்கம்போல் அர்ச்சனா தான் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து இருக்கிறது. மேலும், சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீசன் தொடங்கி தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் எபிசோட்டில் டெடிகேஷன் சுற்று நடைபெற்றது.

அர்ச்சனா கேட்ட கேள்வி:

இந்நிலையில் நிகழ்ச்சியில் சைந்தவி இடம் அர்ச்சனா ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர் கண்ணீர் விட்டு அழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நிகழ்ச்சியில் போட்டியாளர் சுவேதா தன்னுடைய தந்தைக்காக ஆனந்த யாழை என்ற பாடலை பாடியிருந்தார். அப்போது அர்ச்சனா, சைந்திவிடம் உங்களது அப்பா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டிருக்கிறார்.

சைந்தவி அழ காரணம்:

-விளம்பரம்-

அதற்கு சைந்தவி அழுது கொண்டே, நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான். நான் செய்யும் விஷயங்களில் சரி, தவறு என எல்லா அனைத்தையும் வழி நடத்துவது அவர் தான் என்று கூறி இருந்தார். உடனே நிகழ்ச்சியில் சைந்தவியின் அப்பா வந்தார். அவரை பார்த்ததுமே சைந்தவி கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்.

-விளம்பரம்-

சைந்தவி திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடகி சைந்தவி. இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்து வருகிறார். இதனிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

சைந்தவி-ஜி வி பிரகாஷ் பிரிவு:

திருமணத்திற்கு முன்னதாகவே இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் காதலித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிய இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இவர்கள் விவாகரத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதோடு இவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news