விருது விழாவில் விஜயை புகழ் ஆசிரியர் பாடி இருக்கும் பாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கையின் நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கல்வி விருது விழா:
மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு விஜய் அவர்கள் பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கல்வி விருது விழா சென்னையில் இன்று நடைபெற்று இருக்கிறது.
விழா குறித்த தகவல்:
இந்த விழாவில் ஊக்கத்தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்சியின் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.
ஆசிரியர் செய்தது:
மேடையிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார்கள். அந்த வகையில் விஜயை பாராட்டி ஆசிரியர் ஒருவர் மேடையில் பாடியிருக்கும் பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் இடம்பெற்ற வாங்கண்ணா வணக்கம் அண்ணா பாடலின் டியூனை பயன்படுத்தி தான் பாடி இருக்கிறார்.
ஆசிரியர் பாடிய பாடல்:
அந்த பாடல்,
‘கட்சியில சேரணும்னு வீட்டுல சொன்னேங்கண்ணா..
விடவே இல்லைங்கண்ணா..
தவெக தலைவர் விஜய் அண்ணா கட்சியின்னு சொன்னேங்கண்ணா,
Okன்னு சொன்னாங்கண்ணா..
ஊதுறோம் ஊதுறோம் ஊதுறோம்ணா,
எல்லா கட்சியையும் ஊதுறோம்ணா..
ஆக்குறோம் ஆக்குறோம் ஆக்குறோம்ணா,
உங்கள முதலமைச்சர் ஆக்குறோம்ணா என்று பாடி இருக்கிறார்.