மத்தவங்கள மாதிரி வடிவேலு இல்ல, அவரை பொறுத்து வரை – பாவா லக்ஷ்மணன் ஓப்பன் டாக்

0
396
- Advertisement -

மற்றவர்கள் போல் வடிவேலு இல்லை என்று நடிகர் பாவா லட்சுமணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் வடிவேலு குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

குறிப்பாக அவருடன் நடித்த நடிகர்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். இருந்தும் வடிவேலு அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், மாயி படத்தில் வடிவேலு ஓகே சொன்னதால் தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி:

அதன்மூலம் தான் நான் மக்கள் மத்தியிலும் பிரபலமானேன். வடிவேலுவை பொருத்தவரை அவருடன் நடிப்பவர்கள் வசனம் பேச வேண்டும் என்று நினைப்பார். அவருக்கு இந்த வசனத்தை கொடுங்கள், இவருக்கு இந்த வசனத்தை கொடுங்கள் என்று அவர்தான் முடிவெடுப்பார். ஆனால், மற்றவர்கள் எல்லாம் அப்படி சொல்ல மாட்டார்கள். சுமதி, பிரியங்கா ஆகியோர் எல்லோருமே வடிவேலுவால் தான் வளர்ந்தவர்கள்.

வடிவேலு குறித்து சொன்னது:

நிறைய பேர் வடிவேலு மீது குறை சொல்கிறார்கள். ஆனால், அவரால் பல நடிகர்கள் வளர்ந்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், நடிகர் வடிவேலு அவர்கள் இவர் டி ராஜேந்தர் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

வடிவேலு திரைப்பயணம்:

இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தின் எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

வடிவேலு கம்பேக்:

இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். மீண்டும் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மூலம் வடிவேலு கம்பேக் கொடுத்து இருக்கிறார். இந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Advertisement