கோரஸ் பாட மகனை அனுப்ப மறுத்த சீர்காழி கோவிந்தராஜன், நொடியில் முடிவை மாற்ற வைத்த பெயர்- பிரபலம் சொன்ன தகவல்

0
165
- Advertisement -

டிவி நிகழ்ச்சியில் கோரஸ் பாட தன் மகனை பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அனுப்ப தயங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை கலைஞராக திகழ்ந்தவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம். இவர் கர்நாடக இசைப் பாடகர். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் ஆவார். அதோடு கிளாசிக் காலகட்ட திரையிசை மற்றும் கர்நாடக இசையில் தனித்துவமானவர் ‘வெண்கலக் குரலோன்’ சீர்காழி கோவிந்தராஜன்.

-விளம்பரம்-

இவருடைய மகன் தான் பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம். இவரை பாட்டு வைத்தியர் என்று தான் பலரும் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய இசை திறமைக்காக கலைமாமணி விருது, தமிழிசை இசை பட்டம், பத்மஸ்ரீ விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சீர்காழி பாடல்கள் கொடி கட்டி பறந்தது. இன்றும் இவருடைய பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

சீர்காழி கோவிந்தராஜன் குறித்த தகவல்:

குறிப்பாக, இவர் பாடிய பக்தி பாடல்கள் எல்லாம் பல கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இவர் தன்னைப் போலவே தன்னுடைய மகனும் பாடகராக மாற்றி இருக்கிறார். இந்த நிலையில் டிவி நிகழ்ச்சியில் சீர்காழி மகனுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆரம்பத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் மகனுக்கு டிவி ஸ்டேஷனில் பாட வாய்ப்பு கிடைத்தது.

சீர்காழி கோவிந்தராஜன் மகனுக்கு கிடைத்த வாய்ப்பு:

இவரும் தமிழ் சினிமாவின் சிறந்த கதாசிரியர்களில் ஒருவராக இருந்த எம் எஸ் பெருமாளுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. எம்எஸ் பெருமாள் சென்னை டிவி ஸ்டேஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அப்போது பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை எம் எஸ் பெருமாள் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாரதியார் பாடல்களை பாடுவதற்காக சில கலைஞர்களை தேர்வு செய்திருந்தார்கள். அந்த வகையில் யாமறிந்த மொழிகளிலே என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் மகன் சிதம்பரமும், நாடக உலகில் சிறந்து விளங்கிய டி கே சண்முகம் மகன் டி கே எஸ் கலைவாணன் பாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

-விளம்பரம்-

பாடல் பதிப்பில் நடந்தது:

இதனை அடுத்து பாடல் பதிவின் போது எல்லோருமே வந்து விட்டார்கள். ஆனால், சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சிவசிதம்பரம் மட்டும் வரவில்லை. மூன்று பாடல்கள் பதிவு முடிந்துவிட்டது. நாலாவது பாடலை பதிவு செய்யும் போது சிவசிதம்பரம் வராதது குறித்து எம்எஸ் பெருமாள் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் சிவசிதம்பரம் உள்ளே வந்தார். பின் பாடல் பதிவெல்லாம் முடிந்துவிட்டது. அன்று இரவு சென்னை டிவி ஸ்டேஷன் நிர்வாக இயக்குனர் முரளிதரன், எம்எஸ் பெருமாளை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

சீர்காழி கோவிந்தராஜன் சொன்னது:

அதில் அவர், மற்ற பாடகருடன் இணைந்து கோரஸ் பாட வேண்டும் என்பதால் தான் சீர்காழி கோவிந்தராஜன் தன்னுடைய மகனை பாட அனுமதிக்கவில்லை. ஆனால், அவருடன் இணைந்து பாடுவது டி கே எஸ் கலைவாணன் என்ற உடனே ஒப்புக்கொண்டு தன்னுடைய மகனை அனுப்பி வைத்தார். காரணம், இப்போது என்னுடைய மகனை பாட அனுப்பாமல் இருந்தால் டி கே சண்முகம் அண்ணாச்சி மகனுடன் தன் மகனை பாட கோவிந்தராஜன் மறுத்துவிட்டார் என்று அவப்பெயர் வந்துவிடும். நல்லவேளை அதிலிருந்து தப்பித்து விட்டேன் என்று சொன்னதாக கூறி இருந்தார்.

Advertisement