கல்லூரி படிக்கும் போது சக தோழிகளுக்கு மத்தியில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.

0
1703
- Advertisement -

“என்ன மச்சான், சொல்லு புள்ள” என்ற பாடலின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தவர் செந்தில் கணேஷ்— ராஜலட்சுமி. செந்தில் கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர். இந்த ஊர் புஞ்சை, நஞ்சை என விவசாயம் செய்யும் ஊர். அங்கு விவசாயம் செய்பவர்கள் எல்லாம் கலைப்பு தெரியாமல் இருப்பதற்காக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது வழக்கம். அப்படி பாடலை பாட தொடங்கியது நம்ம செந்தில் கணேஷ் தான். இவர் தன்னுடைய எட்டு வயதாக இருக்கும் போதே கவிதைகள், பாடல்கள், எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

-விளம்பரம்-

அதன் மூலம் தான் நிறைய பாடல்களை எழுதி பாடியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பாடல்களை எழுதி கலைஞர்களை சேர்த்து ஒரு நாட்டுப்புற கலைஞர் குழுவையே உருவாக்கினார். பின் இவர் ராஜலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் இவரும் ஒரு நாட்டுப்புற கலைஞர் தான். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார்கள்.

- Advertisement -

அதோடு இவர்கள் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை உலகம் முழுவதும் பாடி பரப்பி வருகிறார்கள். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். பின் போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.

அதோடு இவர்கள் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை உலகம் முழுவதும் பாடி பரப்பி வருகிறார்கள். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். பின் போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.

-விளம்பரம்-

இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டையும் தட்டிச் சென்றார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல் தெறிக்கவிட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அவர்கள் நீட்டித்துள்ளார்.

கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் தங்களுடைய பழைய புகைப்படங்களையும், வீடியோக்களையும்சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் செந்தில் அவர்கள் பேஸ்புக்கில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கல்லூரி படிக்கும்போது வகுப்பறையில் தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் காட்டு தீப் போல பரவி வருகிறது. இதனை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். நான்கு பெண்களுக்கு மத்தியில் செந்தில் கணேஷ் பட்டையை கிளப்புகிறார் என்றும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் செந்தில் கணேஷ்– ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி இருந்தார்கள். அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது செந்தில் கணேஷ் அவர்கள் “கரிமுகன் ” என்று படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். செல்ல. தங்கையா என்ற இயக்குனர் இயக்கும் இந்த படத்தை விமல் ப்ரோடக்க்ஷன் தயாரிக்கிறது. இந்த படம் வசனம், இசை, பாடல்கள் அனைத்தையும் இயக்குனர் செல்ல. தங்கையாவே பார்த்துக் கொண்டு உள்ளார்.

Advertisement