-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

படங்களில் நடிக்காம ஆண்ட்ரியாக்கு எப்படி இதெல்லாம் வந்தது? சுசித்ரா மீண்டும் பரபரப்பு

0
211

ஆண்ட்ரியாவை குறித்து பாடகி சுசித்ரா கூறியிருக்கும் சர்ச்சைக் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார்.

சுசித்ரா குறித்த சர்ச்சை:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

சுசித்ரா பேட்டி:

-விளம்பரம்-

இதற்கு கார்த்திக் குமாரும் பதிலடி கொடுத்து வருகிறார். இருந்தாலும், தொடர்ந்து சுசித்ரா அவர்கள் பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர், தனுஷ், த்ரிஷா, விஜய் போன்ற பிரபல நடிகர்களை குறித்து பல சர்ச்சையான கருத்துக்களையும் கூறி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியாவில் சுசித்ரா விவகாரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இப்படி இவர் அளித்த பேட்டி சர்ச்சை ஓய்வதற்குள் மீண்டும் சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ஆண்ட்ரியா குறித்து சொன்னது:

அதில் அவர் ஆண்ட்ரியா குறித்து சொன்னது, ஆண்ட்ரியாவிடம் நீங்கள் நினைப்பதை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து இருக்கிறது. அவரிடம் 200 வைர நகைகள் இருக்கிறது. ஆண்ட்ரியா வீட்டை சோதனை செய்தால் அவருடன் தொடர்பில் இருந்த பல பேர் சிக்குவார்கள். அவரிடம் மினி கூப்பர் கார் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்தது தான் மீண்டும் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

ஆண்ட்ரியா குறித்த சர்ச்சை:

ஆண்ட்ரியா குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு சுசித்ரா தன்னுடைய சுச்சி லீக்ஸ் கீழ் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதோடு தன்னை விட வயதில் குறைந்த அனிருத்துடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் இவருக்கு சினிமா பட வாய்ப்பு குறைந்தது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news