பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரசியமான சம்பவம் ஒன்று இப்போது இணையத்தில் பரவியுள்ளது. சினிமா உலகில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டு, நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் ரீமேக் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த ‘காஞ்சனா’ மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ராட்சசன்’ படத்தின் ரீமேக்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ‘சூரரைப் போற்று’ படத்தின் ரீமேக்கில் பிஸியாக உள்ளார்.
அசின் குறித்து:
தமிழ் சினிமாவில் பல்வேறு மலையாள நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். ஜெயம் ரவியின் நடிப்பில் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான இவர் அதற்கு முன்னதாகவே ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் வெளியான ‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுபோல் தமிழில் கஜினி, போக்கிரி போன்ற ஹிட் படங்கள் கொடுத்த அசின், பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.
அக்ஷய் குமாருடன் அசின்:
மேலும் அசின் தமிழில் சூர்யாவுடன் நடித்த ‘கஜினி’ படத்தின் ரீமேக்கின் மூலம் பாலிவுட்ல என்ட்ரி கொடுத்தார். பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய குமாருடன் ‘கில்லாடி 786’ திரைப்படமும் ‘ஹவுஸ்புல் 2’ திரைபடத்திலும் இணைந்து நடித்திருந்தார்.இந்த இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அசினின் திருமணம்:
இதுபோல் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக இருந்த அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதிலும் ‘ஹவுஸ்புல்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகப்படுத்தியது அக்ஷய் குமார் தானாம்.அதன் பிறகு கடந்து 2017 ஆம் ஆண்டு அசின் மற்றும் ராகுல் தம்பதிக்கு ‘ஆரின்’ என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
அசின் கணவர் அளித்த பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அசினின் கணவர் ராகுல் ஷர்மா கூறுகையில், அசினுக்கு குழந்தை பிறக்கும்போது தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே அக்ஷய் குமார் தான் முதல் ஆளாக வந்தார் என்றும், அதற்காகவே தன் தனி விமானத்தை தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் பக்க பலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்று கூறியிருந்தார். அதுபோல் ராகுல்-அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் ‘காட்பாதராக’ இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.