விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்து முத்து வீட்டிற்கு வந்தார்கள். இதனால் பல ப்ரச்சனை வந்தது. ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தெரிந்து விட்டது.
சிறகடிக்க ஆசை:
அதன் பின் முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசியதை கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இன்னொரு பக்கம், ரோஹிணிக்கு தொல்லை கொடுத்த வசீகரனை போலீஸ் கைது செய்கிறது. பின் ரோகினி கொடுத்த ஐடியா படி விஜயா, பரதநாட்டிய வகுப்பை தொடங்குகிறார். ஆனால், வகுப்பிற்கு யாருமே வரவில்லை. இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் வருகிறது. முத்து- மீனா இருவருமே விஜயாவின் வகுப்பிற்கு மாணவர்களாக செல்கிறார்கள்.

சீரியல் கதை:
மேலும், ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த நபரை மீனா பார்த்து விடுகிறார். உடனே அவர் தப்பித்து செல்ல மீனாவும் விடாமல் துரத்திக் கொண்டே போகிறார். கடைசியில் அவர் ரோகினியின் கடைக்குள் சென்று விடுகிறார். அவரை ஒரு பிரிட்ஜில் ரோகினி தோழி மறைத்து வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம், முத்துவின் நண்பன் செல்வத்திற்கு பிரிட்ஜ் வேணும் என்பதால் மனோஜ் கடைக்கு வருகிறார். அந்த சமயம் மீனாவும் வருவதால் இருவருமே சென்றார்கள்.
மலேசியா மாமா செய்த வேலை:
மலேசியா மாமா இருக்கும் பிரிட்ஜ் வேணும் என்று செல்வம் சொல்கிறார். உடனே நான் வாங்குகிறேன் என்று ரோகினியின் தோழி சொல்லி எப்படியோ சமாளித்து அவர்களை அனுப்பி விடுகிறார்கள். அதன் பின் வீட்டில் மீனா, நான் ரோகினியின் மாமாவை பார்த்தேன். அவர் என்னை பார்த்து பயந்து ஓடினார் என்று சொல்கிறார். முத்துவிற்கும் ஏற்கனவே ரோகினி மீது நிறைய சந்தேகம் இருக்கிறது. இப்போது மீனா சொன்னதை கேட்டு சந்தேகம் உறுதி ஆகிறது. இதையெல்லாம் ஒட்டு கேட்ட ரோகினி பயத்தில் இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=AIIHATeBc9Y
சீரியல் ப்ரோமோ:
ரோகினி வீட்டில் உள்ள எல்லோர் முன்பும் தன்னுடைய மலேசியா மாமாவுடன் போனில் பேசுகிறார். முத்துவும் போனை வாங்கி பேசுகிறார். இன்னும் முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அண்ணாமலை வீடு கட்ட ஆட்களை அழைத்து கொண்டு வருகிறார். அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு 5 லட்சத்திற்கும் மேலாகும் என்று சொல்கிறார்கள். இதை கேட்டு அண்ணாமலை ஷாக் ஆகிறார். உடனே என்ன செய்வதென்று புரியாமல் அனைவருமே நிற்கிறார்கள். ஒரு கட்டத்தில் ரோகினி, மீனாவை வம்பு இழுத்து பேசுகிறார். உடனே மீனா, என்னுடைய கணவர் மேல் ரூமை கட்டுவார் என்று சவால் விடுகிறார். இதைக் கேட்டு முத்து அதிர்ச்சி ஆகிறார்.






