அது எப்படி திமிங்கலம் இந்த சீன்ல மட்டும் பைத்தியம் தெளிவா இருக்கு – கேலிக்கு உள்ளான விஜய் டிவி சீரியல்.

0
1326
sipikkul
- Advertisement -

இன்றைய நாட்களில் மக்கள் அதிகமாக பார்க்கும் சேனல்களில் ஒன்றாக விஜய் டிவி இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது குறிப்பாக குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலான மக்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஷோவாக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சில சீரியல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் பெற்று வருகிறது. நீங்கள் இதற்கு முன் வேறு டிவியில் பார்த்த நடிகை, நடிகர்கள் கூட இப்பொழுது விஜய் டிவியில் முக்கால்வாசி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்து வந்தார்கள். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள் அடைய பட்டுக் கொண்டிருந்தவர்கள் கவனம் சின்னத்திரையின் பக்கம் திரும்பியது பின்பு டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களை பார்க்கும் கூட்டம் அதிக அளவில் அதிகரித்தது. அதுலயும் தங்களது ஃபேவரட் சீரியல் என்று ஏதாவது ஒரு சீரியலை கண்டிப்பாக முறையில் ஹாட்ஸ்டார் இல் பார்ப்பதை பழக்கமாகவும் ஒரு சிலர் கொண்டு இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாக்கியலட்சுமி= பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, ஈரமான ரோஜா, பாண்டியன் ஸ்டோர் போன்ற சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்கள்.

- Advertisement -

மீம்ஸ் கிரியேட்டர் கவனத்தை ஈர்த்த சீரியல்கள் :-

இந்நிலையில் அதே கொரோனா காலத்தில் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் மூளை வேறு விதமாக யோசிக்க தொடங்கியது. பொதுவாக தமிழிலும், வேறு மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களின் மீம்ஸ் டேம்லெட்டை பயன்படுத்தி மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்த மீமஸ் கிரியேட்டர்ஸ் இந்த கொரோனா காலத்தில் டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியல்களை பார்க்கத் தொடங்கிய பின் மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனம் சீரியல் பக்கமும் விழுந்தது. அப்போதான் பல டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் பிரபல தொடர்களில் கிரிஞ்சியாக செய்யும் சீன்களை எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ரோல் செய்யவும் மீம்ஸ போடவும் தொடங்கி விட்டனர்.

மீம்ஸ் கண்டென்டாக மாறிய விஜய் டிவி :-

இந்த மீம்ஸ் கிரியேட்டர்களின் பசிக்கு அதிகமான தீனி போட்ட டிவி சீரியல் முக்கால்வாசி டிவி சீரியல் விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் தான். உதாரணமாக விஜய் டிவியில் முதன் முதலில் ரோல் செய்யப்பட்ட சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான் நம் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா தனது கணவருடன் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவார். அப்படி அவர் வெளியேறும் போது கையில் பேக்கை எடுத்து செல்வார். ஆனால் எபிசோடுகள் கடந்து கொண்டே போனாலும் கண்ணம்மா அவர் நடப்பதை நிறுத்தவில்லை இப்படியே நாட்கள் செல்ல செல்ல கடுப்பான மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கண்ணம்மாவை வைத்து செய்ய ஆரம்பித்து விட்டனர். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இதோடு நிறுத்தவில்லை.

-விளம்பரம்-

ட்ரோலுக்கு பெயர் போன பாக்கியலெட்சுமி சீரியல் :-

அதன் பின்பு விஜய் டிவியின் மற்றொரு பிரபல சீரியல் ஆன ராஜா ராணி. இந்த சீரியலில் வரும் சில காட்சிகளை ட்ரோல் செய்து மீம்ஸ் கண்டெண்டாக மாற்றி விட்டனர். நல்ல வேலையாக இதோடு ராஜா ராணி சீரியல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட. விஜய் டிவியின் மற்றொரு சீரியல் சிக்கிக் கொண்டது. ஆம், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முதல் இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் வரும் கோபி கதாபாத்திரம் இரண்டு மனைவிகளை வைத்திருப்பார் அவரது மனைவிகள் இருவரும் நண்பர்களாக இருப்பார்கள் இப்படி இருக்கு கோபி அவர் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு எப்போது உண்மை தெரியும் வரும் என்ற பதட்டத்துடனே இருப்பார். ஆகையால் இப்போது வரையிலும் இந்த சீரியல் அதிகப்படியான ட்ரோலுக்கும், மீம்ஸ்க்கும் உள்ளாகி வருகிறது.

மீம்ஸ் கண்டென்டாக மாறும் விஜய் டிவின் இன்னொரு சீரியல் :-

நிலையில் விஜய் டிவியின் மற்றொரு சீரியலும் மீம்ஸ்க்கும், ட்ரோலுக்கும் உள்ளாக போகிறது, போகிறது அல்ல உள்ளாகிவிட்டது. ஏப்ரல் 18 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல் தான் சிப்பிக்குள் முத்து. விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மற்றொரு பிரபல சீரியல் ஆன வைதேகி காத்திருந்தால் சீரியல் எவ்வித காரணங்களும் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக தான் இந்த சீரியல் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். இந்த சீரியலின் கதை எப்படி இருக்கும் என்றால் தனது தங்கை காதல் நிறைவேறுவதற்காக தன் தங்கை காதலிக்கும் பையனின் மனநிலை சரியில்லாத அண்ணனை இந்த சீரியலின் நாயகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கண்டிஷன்.

மீம்ஸ்க்கும், ட்ரோலுக்கான காரணம் :-

தனது தங்கையின் வாழ்க்கைக்காக நாயகியும் மனநிலை சரியில்லாத அந்த நபரை திருமணம் செய்து கொள்கிறார்.இந்த சீரியல் எப்படி ட்ரோல் செய்ய ப்படுகிறது என்றால் உங்களுக்கு சிரிப்பு வர வைத்துவிடும். புதியதா திருமணம் ஆன மனநிலை சரியில்லாதவன் முதலில் தன் மனைவியுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும். இப்போது இந்த சீரியலில் மனநிலை பாதிக்கப்பட்டதா நடிக்கும் கதாபாத்திரம் நாயகியுடன் செய்து வரும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் மனநிலை தெளிவாக நடிப்பது போன்று இயக்குனர் கதை அமைத்து இருக்கிறார். இதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களும் அது எப்படி ரொமான்ஸ் காட்சி நடிக்கும் போது மட்டும் பைத்தியம் தெளிவாகிறது என்றவாறு ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

Advertisement