விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களா வீட்டினுடைய போலி ஓனர், மனோஜை ஏமாத்தி மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஆனால், முத்துவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. பின் மனோஜ், நியூமராலஜிஸ்ட், கூஸ்ட் லேடி என்று அட்ராசிட்டி செய்து இருந்தார். அதோடு மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை கடன் வாங்குகிறார். இன்னும் 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் மனோஜ், வீட்டை விற்று எனக்கான சேர் கொடுங்கள்.
நான் இந்த வீட்டை வாங்கணும் என்றவுடன் எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பின் முத்து- ரவி எல்லோருமே கோபப்பட்டார்கள். உடனே அண்ணாமலை, இது என்னுடைய வீடு இல்லை. விஜயா தான் முடிவெடுக்க வேண்டும். அது அவருடைய அப்பா தந்தது என்று சொன்னவுடன் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதனால் முத்து, மனோஜ் இடையே சண்டை நடந்தது. அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் பணம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்பி இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
ரோகினி, தன் மாமாவிடம் பேசுவது போல் வித்யாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடித்தார். ஆனால், கடைசியில் பணம் இல்லை என்று சொன்னார். இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரவி, மனோஜ் செய்த வேலையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அப்போது ரோகினி- மனோஜ் இருவருமே ஸ்ருதி அப்பாவிடம் பணம் கேட்க சொல்லி ரவியை கட்டாயப்படுத்தி இருந்தார்கள். அதற்கு ரவி, நான் எங்களுக்காகவே சுருதி அப்பாவிடம் கேட்க மாட்டோம். அவரிடம் பணம் கேட்பதெல்லாம் பிடிக்காது என்றார். இருந்தும் ரோகினி- மனோஜ் விடாமல் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
ஒரு கட்டத்தில் சுருதி- ரவி இருவருமே முடியாது என்று மறுத்து விடுவதால் மனோஜ் கோபப்பட்டார். பின் எப்படியாவது இந்த வீட்டை வாங்க வேண்டும் என்று ரோகினி, மனோஜை உஷ்பேத்தி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, தனக்கு எப்படி எல்லாம் வீடு வேணும் என்று சொன்னார். பின் தூங்கிக் கொண்டிருக்கும் போது ரோகினியை, விஜயா அடித்து வீட்டை விட்டு துரத்துவது போல கனவு கண்டார். பயத்தில் ரோகினி கத்த, மனோஜ் அவரை எழுப்பி சமாதானம் செய்து இருந்தார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு பின் சவாரிக்கு முத்து, மனோஜினுடைய முன்னாள் காதலி ஜீவாவை அழைத்துக் கொண்டு போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜீவா- முத்து இருவருமே கலகலப்பாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது ஜீவா, ஒரு இடம் வாங்குகிறேன். ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போகணும். இந்த வேலை போன முறையே முடிந்திருக்கும். ஒரு பிராடு என்னிடம் 30 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டது என்று சொன்னார். பின் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் ஜீவா, இடம் வாங்குவது பற்றிக்கான விவரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ரோகினி- மனோஜ் அங்கு வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் ஜீவா கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் முத்துவிடம் நான் யாரை பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அவர்களே பார்க்கும்படி ஆகிவிட்டது என்று சொல்கிறார். அதற்குப்பின் ஜீவா, முத்துவுக்கும் அவருடைய மனைவிக்கும் பரிசு ஒன்றைக் கொடுத்தார். இன்னொரு பக்கம் விஜயா, அண்ணாமலை இருவரும் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பங்களாவுடைய உண்மையான ஓனர் வந்து விடுகிறார். அப்போது அவர், யார் நீங்கள்? எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், நான்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொல்ல, உண்மையான ஓனர் நான்தான். அவர்கள் இங்கு வாடைக்கு இருந்தவர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். பின் மனோஜ் அந்த போலி ஓனருக்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால், ஸ்விச் ஆப். இத்துடன் சீரியல் முடிகிறது.