முத்துவை சிக்க வைக்க சிட்டி போட்ட ஸ்கெட்ச், ரோகினி என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
240
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார். அதை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார். ஆனால் , அவர் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டு விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் கொடுத்தார்.

-விளம்பரம்-

விஜயாவிற்கு பிரியாணி ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, உடனே மீனா, நடந்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள். இந்த வாரம் செல்வம், பண கஷ்டத்தில் குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று செல்வம் கேட்க, நான் எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்று முத்து வாக்கு கொடுத்தார். பின் வீட்டில் முத்து, நடந்தை சொல்லி தனக்கு கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மீனாவிடம் கேட்க, அவர் முடியாது என்று அறிவுரை சொன்னார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

முத்து என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் இருக்கிறார். பின் ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டார். உடனே அவர் ஷாக் ஆகி ஏன்? எதற்கு? என்று கேட்க, என்னுடைய தோழிக்கு ரொம்ப அவசர தேவை என்று ரோகினி சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுக்க, இதனால் ரோகினி- மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. பின் ரோகினி- ஸ்ருதி- மீனா மூவரும் கிச்சனில் பேசிக்கொண்டிருந்தார்கள். மாடியில் ரவி, முத்து, மனோஜ் மூவரும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் கதை:

கடைசியில் ஸ்ருதி, ரவி சொன்ன ஐடியால் சமாதானம் ஆனார்கள். நேற்று எபிசோடில், ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதாக மனோஜ் சொன்னவுடன் சந்தோசப்பட்டார். மறுநாள் கடையில் ரோகினி பணம் வாங்க வந்தார். அப்போது ரோகினியின் தோழி ட்ராமா செய்து மீண்டும் மனோஜிடம் வட்டிக்கு வாங்குகிறார். பின் வெளியில் வந்த ரோகினி, 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவு கொடுத்து விடு என்று சொன்னார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதற்கு பின் முத்து, பணத்தை ரெடி பண்ணி செல்வத்திடம் கொடுக்க, அவர் வாங்க மறுத்தார். உடனே முத்து, என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுகிறாய்? என்று கேட்டதற்கு செல்வம் எதுவுமே சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ரோகினியை பிளாக் மைல் செய்பவர், கிருஷை போட்டோ எடுத்து, உன்னை மாதிரி உன் மகன் இருக்கிறான் என்று மிரட்டி 300000 பணம் கேட்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

உடனே ரோகினி, சிட்டியை சந்தித்து என்னை மிரட்டும் நபரை ஏதாவது செய்து விடுங்கள் என்று சொல்ல, அதற்கு சிட்டி, உன் மாமியாரின் பணத்தை திருடியது மீனாவின் தம்பி சத்யா தான். இது முத்துவிற்கும் தெரியும். அந்த சிசிடிவி வீடியோ முத்து மொபைலில் இருக்கிறது. அதை நீங்கள் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் உங்களுக்கு தேவையான எல்லாம் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி யோசிக்கிறார்.

Advertisement