விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி அம்மா போனில் பேசியதை பற்றி முத்து சொல்லி புலம்ப, மீனா ஆறுதல் சொல்லி இருந்தார். பின் கிரிஷை பற்றி ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்க பார்க்கிறார்கள் என்று முத்து சொல்ல, ரோகினி ஷாக் ஆகி இருந்தார். பின் ரோகினியை பற்றி எல்லா உண்மையும் தெரிந்து விஜயா-மனோஜ் இருவருமே பயங்கரமாக திட்டி அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள். ஆனால், அது உண்மை இல்லை. ரோகினி கண்ட கனவு. மறுநாள் காலையில் மீனா பூ வியாபாரத்திற்கு போனார். ஆனால், அங்கு மீனாவை ஒருவர் பின் தொடர்ந்து வந்தார்.
இதனால் பயந்து போன மீனா, ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு வித்யா, முத்துவின் போனை பார்த்திருந்தார். ஆனால், பதட்டத்தில் மீனா அதை கவனிக்கவில்லை. பின் ஒரு வழியாக மீனாவை அனுப்பிவிட்டு போனை மறைத்து வைத்தார் ரோகினி. இன்னொரு பக்கம் மீனாவை துரத்தி வந்த நபர் முத்துவின் நண்பருடைய தம்பி. அவர் முத்துவிற்கு அறிமுகமாகி இருந்தார். அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்வதாகவும், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் முத்துவிடம் சொன்னார். உடனே முத்து, கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
தன்னுடைய மனைவியை தான் அவர் காதலிக்கிறார் என்று தெரியாமல் முத்து ஐடியா கொடுத்தார். நேற்று எபிசோட்டில் முத்து ஃபோனை கடலில் போட்டு விடு என்று ரோகினி சொன்னதால் வித்யாவும் எடுத்துக்கொண்டு போனார். அப்போது போகும் வழியில் வித்யா செருப்பு அறுந்து விட்டது. இதனால் அதை அவர் தைத்து விட்டு கிளப்பும் போது முத்து போனை தொலைத்து விட்டார். ஆனால், இதை ரோகினி இடம் சொல்லாமல் வித்யா மறைத்தார். அந்த போனை முத்துக்கு தெரிந்த தாத்தா -பாட்டி எடுத்து வைதார்கள். இன்னொரு பக்கம் மீனாவுக்கு மண்டபத்தில் டெக்கரேஷன் செய்வதற்கு புதிய ஆர்டர் கிடைத்தது.
நேற்று எபிசோட்:
அந்த இடத்திற்கு வந்த மீனாவை காதலிக்கும் நபர், முத்து சொல்லி தந்தது போல எதார்த்தமாக பேசினார். ஆனால், மீனா பெரிதாக அவரிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அதை அடுத்து மனோஜ் கடையில் மந்திரித்த முட்டை வைத்திருந்தார்கள். இதை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து விட்டார். பின் கடையில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக மனோஜ் பயமுறுத்த, ரோகினி அதை நம்பவில்லை. பின் தன் நண்பர் மூலம் மனோஜ், ரோகினி இருவரும் மந்திரம் தந்திரம் செய்பவரை சந்தித்து பேசி இருந்தார்கள். அவர் பணத்தை பறிக்க இன்னும் பயமுறுத்தி பேசினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவை பாலோ செய்யும் நபர், முத்துவை சந்தித்து நடந்ததை சொல்கிறார். உடனே முத்து வேறு ஒரு ஐடியா தருகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், கடையில் மந்திரத்தை முட்டை இருந்ததைப் பற்றி விஜயாவிடம் சொல்கிறார். அவருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் உங்களுக்கும் தான் பிரச்சனை இருக்கு, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் பரிகாரம் பண்ணனும் என்றார் மனோஜ். ஆனால், விஜயா முடியாது என்று மறுக்கிறார். அப்போது வெளியே வரும்போது பேன் கீழே விழ, விஜயா பயந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே மனோஜ், பிரச்சனை இருக்கிறது பார்த்தீர்களா? பரிகாரம் செய்கிறோம் என்று சொன்னவுடன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார் விஜயா. மறுநாள் காலையில் மோட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் இல்லை. இதனால் மொத்த குடும்பமே குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்போது பிளம்பர், சுச்சை ஆன் பண்ணாதீர்கள். நான் காயில் மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று போகிறார். ஆனால், மனோஜ் இதை கவனிக்காமல் ஸ்விட்ச்சை போட்டு விடுகிறார். அந்த சமயம் பார்த்து விஜயா ஸ்விட்ச்சில் கை வைத்ததால் ஷாக் அடிக்கிறது. ஒவ்வொருவருமே விஜயாவை தொடத்தொட எல்லோருக்குமே ஷாக் அடிக்கிறது. இதை பார்த்து மீனா ஷாக்கில் நின்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.