விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, தப்பு செய்தது ரெண்டு பேரும் தான். ரோகினியை மட்டும் தண்டிப்பது சரி இல்லை என்று எடுத்து சொல்ல, விஜயாவும் மனம் மாறி ரோகினியை மன்னித்து விட்டு அட்வைஸ் பண்ணார். கடந்த வாரம் எபிசோட்டில் முத்து, விஜயா சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர், இதற்கு தீர்ப்பை நான் சொல்கிறேன். இனிமேல் ஷோரூமுக்கு அப்பா தான் ஓனர். அவருடைய பொறுப்பில் தான் ஷோரூம் நடக்க வேண்டும். மனோஜ் இனிமேல் ஏமாறவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது என்று சொன்னவுடன் விஜயா, மனோஜ் உடைய முகமே மாறுகிறது.
அதோடு அதை யாராலும் மறுத்து பேசமுடியவில்லை. ஸ்ருதி, ரவி, மீனா எல்லோருமே முத்து சொன்னதை கேட்டு சந்தோஷப்பட்டு கைதட்டி இருந்தார்கள். ஆனால், விஜயாவிற்கு கோபம் அதிகமானது. அதன் பின் ரோகினி, மனோஜ் தனக்கு சப்போர்ட் செய்யாததை பற்றி சொல்லி சண்டை போட்டார். ஆனால், கடைசி வரை மனோஜ், தான் செய்தது தவறு என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ரோகினி மீது தான் கோபப்பட்டார். அதற்கு பின் விஜயா, ரோகினி- மனோஜிடம் பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது விஜயா, நீங்கள் அந்த 27 லட்சம் பணத்தை கொடுத்து விட்டால் முத்துவின் ஆட்டத்தை அடக்கிவிடலாம். நீ எப்படியாவது உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்தை வாங்கி கொடு என்று ரோகினிக்கு ஆர்டர் போட்டார். அதிர்ச்சியில் ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. மறுநாள் காலையில் ஷோரூம் போவதற்கு முத்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஷோரூமிற்கு முத்து குடும்பமே போயிருந்தது. எல்லோரையும் பார்த்து மனோஜ்- ரோகினி
ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் முத்து, தன்னுடைய அப்பாவுக்கு மாலை அணிவித்து ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்பட்டார். அதோடு இவர் தான் இனி கடையின் ஓனர் என்று சொன்னவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மனோஜ், ரோகினியால் எதுவும் பேசவே முடியவில்லை. அந்த சமயம் பார்த்து டீலர் ஓனர் சந்தோஷி அங்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் ஏதோ சொல்லி அண்ணாமலை சமாளித்து விடுகிறார். அப்போது மனோஜிடம் அட்வான்ஸ் கொடுத்த சப் டீலர்ஸ்கள் வருகிறார்கள்.
மனோஜ் செய்த வேலை:
அவர்கள் பணத்தை திருப்பி கேட்டவுடன் மனோஜ் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். உடனே சந்தோஷி பொருள் தாமதம் ஆகிறது உடனே வந்து விடும் என்று சமாளித்து அவர்களை அனுப்பிவிட்டு மனோஜை பயங்கரமாக திட்டுகிறார். அப்போது அண்ணாமலை, பங்களா வாங்க மனோஜ் செய்த வேலையை சொன்னவுடன் அவருக்கு கோபம் அதிகமானது. உடனே அவர், மனோஜை திட்டிவிட்டு இனிமேலாவது புத்தியாக நடந்து கொள். உன் அப்பா, தம்பிக்காக தான் இந்த டீலங்கை ஒத்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விடுகிறார். பின் வீட்டில் எல்லோருமே கோபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
முத்து வந்தவுடன் விஜயா தாண்டவம் ஆடுகிறார். மனோஜ்-ரோகினி இருவருமே முத்துவிடம் சண்டைக்கு போகிறார்கள். கோபத்தில் மீனா, ஆரம்பித்து வைத்ததெல்லாம் உங்கள் கணவர் தான். அவர் சரியாக இருந்தால் இவ்வளவு பிரச்சினையே கிடையாது என்று சொன்னவுடன் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டார்கள். கடைசியில் அண்ணாமலை எல்லோரையும் திட்டி அனுப்பி விடுகிறார். பின் விஜயா, நீ எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்துவிடு. இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று ரோகினியை மிரட்டுகிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கதிரை கண்டுபிடிக்க திட்டம் போடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.