விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டி, கோயிலில் வீடியோ கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரோகினி, உன்னை யாராவது பார்த்து விட்டார்களா? என்று கேட்க, மீனாவின் அம்மா-சத்யா எல்லாம் பார்த்தார்கள் என்று சொன்னவுடன் ரோகினி
பயந்தார். இன்னொரு பக்கம் மலேசியாவில் இருந்து வந்தவர்களுக்காக மீனா, வீட்டில் தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த விஜயா கோபப்பட்டு சண்டை போட்டார். உடனே அண்ணாமலை, என்னிடம் முத்து கேட்டு தான் செய்கிறான் என்றவுடன் விஜயா எதுவும் பேசாமல் சென்று விட்டார்.
அந்த சமயம் பார்த்து மலேசியாவில் இருந்து வந்தவர்களை முத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்களை உபசரித்து அண்ணாமலை விசாரித்தார். உடனே விஜயா, என்னுடைய மூத்த மருமகளும் மலேசியா தான் என்று ரோகினியை அழைத்தார். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டே இருந்தார். எல்லோருமே ரோகினுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி, பல் வலி என்று வீங்கியது போல் டிராமா செய்து அங்கு இருந்து எஸ்கேப் ஆக பார்த்தார் . இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது. ஆனால், ரோகினி உடன் ஸ்ருதி ஹாஸ்பிடலுக்கு போனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து முத்துவிற்கு ரோகினி மீது நிறைய சந்தேகம் வந்தது. இதைப்பற்றி மீனாவிடம் சொல்ல, அவருமே ரோகினி மீது தான் சந்தேகப்பட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, ஸ்ருதியை கழட்டிவிட்டு எஸ்கேப்பாக பல முயற்சி செய்தார். ஆனால், ஸ்ருதி விடாமல் அவருடன் தான் இருந்தார். பின் ரோகினியை செக் பண்ணி பார்த்த டாக்டர், அவருக்கு சொத்தைப்பல் இருக்கிறது. பிடுங்கிவிட வேண்டும் என்று சொன்னவுடன் ரோகினி பயந்து விட்டார். ஸ்ருதி எதுவாக இருந்தாலும் செய்யுங்கள் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
ஒரு வழியாக பல்லை டாக்டரும் பிடுங்கி விட்டதால் ரோகினிக்கு உண்மையிலேயே பல்வலி அதிகமாகி வீக்கம் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் கிளம்பி விட்டார்கள். அதற்கு பின் தான் ரோகினியும் வீட்டிற்கு வந்தார். பின் ஹாஸ்பிடல் நடந்ததை ஸ்ருதி சொன்னவுடன் எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், ரோகினி தப்பித்து விட்டோம் என்று இருந்தார். முத்துவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமாகி இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரோகினி மொபைலுக்கு கால் வருகிறது. அதை மனோஜ் எடுத்து பேசுகிறார். அப்போது வாடகை கட்டவில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள் ரோகினி என்று கேட்கிறார். மனோஜ்க்கு ஒண்ணுமே புரியவில்லை போனை வைத்து விடுகிறார். பின் மனோஜ், இதைப் பற்றி ரோகினி இடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். உடனே கோபத்தில் மனோஜ், எதுவாக இருந்தாலும் ஏன் என்னிடம் மறைகிறாய்? நீ என்னிடம் உண்மையை சொல்ல மாட்டுகிறாய் என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கோபித்துக் கொண்டு மனோஜ் மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்து, மீனா சொன்னதை மீறி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். இதை அறிந்தவுடன் மீனா கோபப்பட்டு முத்துவிடம் சண்டை போடுகிறார். இதனால் முத்து மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி போன் செய்தும் ரவி வேலையில் பிஸியாக இருந்தால் எடுக்கவில்லை. ஏன் போன் எடுக்கவில்லை? என்று கோபத்தில் ஸ்ருதி ரவியிடம் சண்டை போடுகிறார். இதனால் ரவியுமே மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார். மூன்று பேருமே மொட்டை மாடியில் திருமண வாழ்க்கை பற்றியும், பொண்டாட்டியால் நிம்மதி இல்லை என்றும் புலம்பி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.