விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, முத்துவின் மொபைலை எடுக்க அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார். இது தெரியாமல் முத்து-மீனா இருவருமே குடித்து நன்றாக அசந்து தூங்கி விட்டார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று மொபைலை எடுக்க ரோகிணி போக, அந்த சமயம் பார்த்து விஜயா வந்ததால் ஏதோ காரணம் சொல்லி ரோகினி சமாளித்தார். அதற்குப்பின் மொபைலை எடுக்க ரோகினி வெளியே வந்தார். அப்போது மனோஜ் வந்ததால் மீண்டும் அவரால் போனை எடுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் மனோஜ் கடையில், அவர் வைத்த பீம்பாய் அடியாட்கள் கூட்டிட்டு வந்து பணத்தைக் கேட்டு மிரட்டி இருந்தார்.
மனோஜ் பணம் கொடுக்காததால் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் அந்த ஆட்கள் எடுத்துக் கொண்டு சென்றார்கள். கடந்த வாரம் எபிசோட்டில் சீதாவை பெண்பார்க்க வரும் விசயத்தை மீனா சொல்ல, முத்துவும் ஒத்து கொள்கிறார். பின் வீட்டில் மனோஜ், முத்துவால் என் கடையில் பிரச்சனை. கடை வியாபாரமே கெட்டுப் போனது என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்குப்பின் நடந்தை மனோஜ் சொல்ல, விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். கடைசியில் இந்த மாதம் பணம் கொடுக்க முடியாது என்று மனோஜ் சொல்ல, முத்து வாக்குவாதம் செய்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டார் சீதாவை பார்த்த உடன் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சீதா எதுவுமே சொல்லாமல் தயங்கி அமைதியாகவே இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்கு பின் சீதாவிடம் முத்து, உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டதற்கு, சில கண்டிஷனை போட்டார். இன்னொரு பக்கம் பிஏ, ரோகினியிடம் பேச வேண்டும் போன் செய்து கொடு என்று வித்யாவை டார்ச்சர் செய்தார். வித்யா போன் செய்தவுடன் ரோகிணி போனை விஜயா எடுத்துப் பேச, உடனே ரோகினி போனை வாங்கி ஏதோ பேசி சமாளித்து விட்டார். விஜயாவும் நம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
முத்து-மீனா இருவருமே மாப்பிள்ளை பற்றியும் சீதா திருமணத்தை பற்றியும் பேசிக்கொண்டு காரில் வந்தார்கள். கடைசியில் ரோகினி- வித்யா இருவருமே சிட்டியை சந்தித்து பி.ஏ டார்ச்சர் செய்வதை பற்றி பேச, நீங்கள் வீடியோ எடுத்து கொடுத்தால் தான் நான் உதவி செய்வேன் என்று கண்டிஷன் போட்டார். ரோகினி எதுவும் பேச முடியாததால் டைம் கொடுங்கள், கூடிய சீக்கிரத்திலேயே எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் சீதாவை பார்க்க வந்த மாப்பிள்ளையை ரெஸ்டாரண்டில் சந்தித்து முத்து – மீனா பேசுகிறார்கள். அவர் ரொம்ப எதார்த்தமாக நிறைய விஷயங்கள் பேசி சில கண்டிஷனை போடுகிறார். இதைக் கேட்டு மீனா-முத்து இருவருக்குமே ஷாக் ஆகிறது. கடைசியில் அவர்கள் சீதா பேசி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்கள். அதற்கு பின் மனோஜ், கடையில் வியாபாரமே ஆகவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே ரோகினி இடம் மனோஜ் ஐடியா கேட்கிறார். அந்த சமயம் பார்த்து வந்த மனோஜ் நண்பர், பெரிய டீலர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள், பெரிய பணக்கார வசதியான குடும்பம் என்று சொன்னால் அந்த ஆர்டர் கிடைக்கும். கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று சொன்னவுடன் மனோஜ் பேராசைப்படுகிறார். ஆனால், ரோகினி வேணாம் என்று சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை. நம்முடைய கல்யாண நாளை கிராண்டாக செய்து அந்த டிலரை வர வைத்து ஆர்டரை ஓகே பண்ணிடலாம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று ரோகினி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.