மனோஜை தேடி வந்த புதிய சிக்கல், ரோகினி என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
165
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, தன்னுடைய அம்மா, மகனையும் சென்னைக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் தங்க வைத்தார். இருந்தாலும், யாராவது பார்த்து விடுவார்களா? என்ற பதட்டத்திலேயே ரோகினி இருந்தார். அதற்கு பின் ரோகினி, யாரிடம் பேசாதே, எங்கும் போகாதே, எங்கேயும் விளையாடதே , சீக்கிரமாகவே லைட் ஆப் பண்ணி தூங்கி விடுங்கள் என்று பல கண்டிஷன்களை போட்டார். இதனால் கடுப்பாக்கி அவருடைய அம்மா, இதற்கு எங்களை ஜெயிலில் போட்டிருக்கலாம் என்று சொன்னார்.

-விளம்பரம்-

அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்ய, எங்களை பார்க்க வராதே. போன் பண்ணாதே என்று முகத்தில் அடித்தது போல் பேசி இருந்தார் ரோகினி அம்மா. இதனால் முத்து ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் கிரிஸை ஸ்கூலில் சேர்த்தார்கள். அந்த பள்ளியில் தான் அண்ணாமலை வேலை கேட்டு போனார். ஆனால், ரோகினி -அண்ணாமலை இருவருமே சந்திக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த முத்து, கிரிஷ் பாட்டி பேசியதை பற்றி சொல்லி புலம்ப, மீனா ஆறுதல் சொல்லி இருந்தார். பின் கிரிஷை பற்றி ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்க பார்க்கிறார்கள் என்று முத்து சொல்ல, ரோகினி ஷாக் ஆகி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் ரோகினியை பற்றி எல்லா உண்மையும் தெரிந்து விஜயா-மனோஜ் இருவருமே பயங்கரமாக திட்டி அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தார்கள். ஆனால், அது உண்மை இல்லை. ரோகினி கண்ட கனவு. மறுநாள் காலையில் மீனா பூ வியாபாரத்திற்கு போனார். ஆனால், அங்கு மீனாவை ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். இதனால் பயந்து போன மீனா, ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு வித்யா, முத்துவின் போனை பார்த்திருந்தார். ஆனால், பதட்டத்தில் மீனா அதை கவனிக்கவில்லை.

நேற்று எபிசோட்:

பின் ஒரு வழியாக மீனாவை அனுப்பிவிட்டு போனை மறைத்து வைத்தார் ரோகினி. இன்னொரு பக்கம் மீனாவை துரத்தி வந்த நபர் முத்துவின் நண்பருடைய தம்பி. அவர் முத்துவிற்கு அறிமுகமாகி இருந்தார். அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்வதாகவும், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் முத்துவிடம் சொன்னார். உடனே முத்து, கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். ஆனால், தன்னுடைய மனைவியை தான் அவர் காதலிக்கிறார் என்று தெரியாமல் முத்து ஐடியா கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து ஃபோனை கடலில் போட்டு விடு என்று ரோகினி சொன்னதால் வித்யாவும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது போகும் வழியில் அவருடைய செருப்பு அறுந்து விடுகிறது. அதை அவர் தைத்து விட்டு கிளப்பும் போது அந்த போனை வித்யா தொலைத்து விடுகிறார். ஆனால், இதை ரோகினி இடம் சொல்லாமல் வித்யா மறைக்கிறார். அந்த போனை முத்துக்கு தெரிந்த தாத்தா -பாட்டி எடுத்து வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினிக்கு மண்டபத்தில் டெக்கரேஷன் செய்வதற்கு புதிய ஆர்டர் கிடைக்கிறது. அந்த இடத்திற்கு மீனாவை காதலிக்கும் நபர் வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அவர் மீனாவிடம் முத்து சொல்லி தந்தது போல எதார்த்தமாக பேசுகிறார். ஆனால், மீனா பெரிதாக அவரிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அதை எடுத்து மனோஜ் கடையில் மந்திரித்த முட்டை வைத்திருக்கிறார்கள். இதை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து விடுகிறார். பின் அங்கு வேலை செய்யும் நபர்கள், கடையில் வியாபாரம் இல்லை. அதை தடுக்க தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி மனோஜை அதிகமாக பயமுறுத்துகிறார்கள். ரோகினி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் நண்பர் மூலம் மனோஜ், ரோகினி மந்திரம் தந்திரம் செய்பவரை சந்தித்து பேசுகிறார்கள். அவர்கள் பணத்தை பறிக்க இன்னும் பயமுறுத்தி பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement