விஜயா செய்த வேலையால் மீனா வீட்டில் வெடித்த பூகம்பம், முத்து என்ன செய்யப் போகிறார்? சிறகடிக்க ஆசை

0
251
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போனை காணவில்லை என்று வீடு முழுக்க முத்து-மீனா இருவருமே தேடி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினி மனதுக்குள் சந்தோஷப்பட்டார். பின் பங்க்ஷன் நடந்த இடத்திற்கு சென்று மண்டபம் முழுவதுமே முத்து மொபைலை தேடி பார்த்தார். ஆனால், கிடைக்கவே இல்லை. இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை பார்த்து சத்யா வீடியோவை கொடுத்தார். அதை சிட்டி இன்டர்நெட்டில் வெளியிட்டார்.

-விளம்பரம்-

அதன் பின் விஜயா மேல் பல்லி விழந்தது. அதை மீனா தட்டி விட அது மனோஜின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. இருந்தாலுமே, பல்லி விழுந்த சகுனம் சரியில்லை என்று விஜயா புலம்பி இருந்தார். பின் மொபைலில் ரோகினி செக் பண்ணி பார்க்க, விஜயா- மனோஜ்- ரோகினி மூவருக்குமே நன்றாக இருக்கிறது. ஆனால், மீனாவிற்கு தான் துன்பம் வரும் என்று போடப்பட்டிருந்தது. இதனால் மீனா வருத்தத்தில் இருந்தார். அதற்கு பின்பு தன்னுடைய தோழிகளிடம் நடந்ததை சொல்லி இருந்தார் மீனா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம், மீனாவிற்கு வேறொரு போனின் மூலம் முத்து போன் செய்து பேசி இருந்தார். அதற்குப்பின் மீனா, முத்துவிற்காக ஒரு புது போனை வாங்கினார். இந்த வாரம் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு விஜயாவிடம் காண்பித்தார். விஜயா, இது யார் என்று தெரிந்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல, அது சத்யா தான் என்று தெரிந்தவுடன் அவர் ரொம்ப ஷாக் ஆகி கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சத்யா தான் தன்னுடைய பணத்தை திருடினான் என்று தெரிந்தவுடன் விஜயா கொந்தளித்து ரோகினி உடன் மீனா வீட்டிற்கு சென்று இருந்தார். பின் சத்யாவை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கினார். மீனாவிற்கும் அவருடைய அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே விஜயாவை தடுத்து நிறுத்தி மீனா கேட்டதற்கு, சத்யா வீடியோவை காண்பித்தவுடன் அவர் அதிர்ச்சியில் எதுவுமே பேசாமல் அமைதியாகி விட்டார் . பின் விஜயா ரொம்ப கேவலமாக மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பேசி, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யா செய்த வேலையால் மீனாவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து அழுது கொண்டிருக்கிறார்கள். சத்யா எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே அவரின் அம்மா, எங்களுடைய வாழ்க்கையை அழித்து விட்டாய் என்று திட்டிக் கொண்டிருக்கிறார் இன்னொரு பக்கம் இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்து சத்யாவை கைது செய்ய வருகிறார்கள். பின் விஜயா, வீட்டில் பயங்கர கலவரமே செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலையால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த முத்து, என்னாச்சு? என்று கேட்க, நடந்ததை எல்லாம் மனோஜ் ரோகினி சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை. வழக்கம்போல் விஜயா ருத்ர தாண்டவம் ஆடி மீனா வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்கிறார். ஆனால், மீனாவை அழைக்க அவருடைய அம்மா வீட்டுக்கு முத்து வருகிறார். முத்துவை பார்த்தவுடன் மீனா கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்க, அவரை சமாதானம் செய்கிறார். மீனாவின் அம்மாவும் முத்து விடம் மன்னிப்பு கேட்க, சத்யாவிற்கு துணையாக சப்போர்ட் செய்து முத்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement