ரோகினியின் மீது சந்தேகப்படும் மீனா- முத்து, மனோஜால் விஜயாவுக்கு வந்த சோதனை- சிறகடிக்க ஆசை

0
177
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் விஜயா- மனோஜ் இருவரும் பரிகாரம் செய்ய போனார்கள். அப்போது மனோஜ் வேப்பிலை ஆடையை அணிந்தும், விஜயா மாலையெல்லாம் போட்டு இருவரும் அம்மனுக்கு தீ சட்டி எடுத்தார்கள். அந்த சமயம் கோயிலுக்கு வந்த முத்து-மீனா இதை பார்த்து மொபைலில் வீடியோவாக எடுத்து தன்னுடைய அப்பாவிடம் காண்பித்தார்கள். இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது. அண்ணாமலை, யாரோ எதாவது விளையாட்டுத்தனமாக செய்ததை கூட இப்படியா நம்புவது என்றார். ஆனால், அதை மனோஜ் கேட்கவில்லை.

-விளம்பரம்-

அந்த சமயம் பார்த்து ஷோரூமில் வேலை செய்யும் நபர், கடையில் முட்டை வைத்தது பக்கத்து கடைக்காரர் தான். அவர் முட்டை வாங்கிக் கொண்டு வந்தார். மழையில் ஒதுங்கியதால் மறந்து நம் கடையில் வைத்து விட்டு சென்று விட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே மனோஜை பார்த்து முறைத்தது. நேற்று எபிசோட்டில் உண்மை தெரிந்த உடன் விஜயா- ரோகினி இருவரும் மனோஜ் மீது பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் மீனா, பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவரை காதலிக்கும் நபர் ஃபாலோ செய்து வந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

உடனே மீனா, முத்துவிடம் போன் செய்து நடந்ததை சொன்னார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தனக்கு நெருக்கமானவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல ரவியை அழைத்தார். அவரும் முதலில் ஒத்துக்கொண்டார். அந்த சமயம் பார்த்து ரவியின் பாஸ் போன் செய்து வேலை இருக்கிறது என்று சொன்னதால் ரவி, பார்ட்டிக்கு வர முடியாது என்று கிளம்பி விட்டார். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம். இருந்தாலுமே பார்ட்டிக்கு சுருதி தனியாகவே போனார். ஆனால், அந்த பார்ட்டிக்கு தான் ரவி ஆர்டர் எடுத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்தவுடன் ஸ்ருதிக்கு கோபம் வந்து சண்டை போட்டார்.

நேற்று எபிசோட்:

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. இன்னொரு பக்கம் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போனார். அப்போது பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொன்னதும் மீனா ஷாக் ஆனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, பார்வதியிடம் பணம் கொடுத்த விஷயத்தை முத்துவிடம் மீனா சொல்கிறார். இதை கேட்டு ஷாக் ஆன முத்து, ரோகினி எதையோ மறைக்க பார்க்கிறார் என்று சந்தேகப்படுகிறார். மறுநாள் காலையில் கிச்சனில் சுருதி- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது வந்த ரோகினி இடம் மீனா, நீங்கள் பணம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. எதற்காக நீங்கள் கொடுத்தீர்கள்? என்று கேட்கிறார். இதைக்கேட்ட உடன் ரோகினி ஷாக் ஆனார். உடனே சுருதி, நீங்கள் எதற்கு கொடுக்கணும்? உங்களுக்கு எதற்கு இந்த வேலை என்றெல்லாம் கேட்க, ரோகினியால் எந்த பதிலுமே சொல்ல முடியவில்லை. ஏதேதோ சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனால் மீனா-சுருதி இருவருக்குமே சந்தேகம் வருகிறது. இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொல்ல, அவர் ரோகினி பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கலாம் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கடையில் ரோகினி நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது திஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்கிறார்கள். இதை அறிந்த ரோகினி, மனோஜிடம் சொன்னார். உடனே அந்த நபர், இந்த போட்டோவால் நிறைய பேருக்கு லாபம், நன்மை நடந்து இருக்கிறது என்று சொல், அதை நம்பி மனோஜ் அந்த புகைப்படத்தை கடையில் மாட்டி வைத்து மாலை போடுகிறார். இன்னொரு பக்கம் மீனா இருக்கும் இடத்திற்கு அவரை காதலிக்கும் நபர் வருகிறார். அங்கு வந்த சீதாவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் தைரியம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement