விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மாப்பிள்ளை வீட்டார் சீதாவை பார்த்த உடன் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சீதா எதுவுமே சொல்லாமல் தயங்கி அமைதியாகவே இருந்தார். மீனா குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் சீதா சில கண்டிஷனை போட்டார். இன்னொரு பக்கம் பிஏ, ரோகினியிடம் போன் செய்து பணம் கேட்டு மிரட்டி இருந்தார். மீனா ஏதோதோ சொல்லி சமாளித்தார். பின் முத்து-மீனா இருவருமே மாப்பிள்ளை பற்றியும் சீதா திருமணத்தை பற்றியும் பேசிக்கொண்டு காரில் வந்தார்கள்.
கடந்த வாரம் ரோகினி- வித்யா இருவருமே சிட்டியை சந்தித்து பி.ஏ டார்ச்சர் செய்வதை பற்றி பேச, நீங்கள் சத்யா வீடியோ எடுத்து கொடுத்தால் தான் நான் உதவி செய்வேன் என்று கண்டிஷன் போட்டார். ரோகினி எதுவும் பேச முடியாததால் டைம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார். அதற்குப்பின் சீதாவை பார்க்க வந்த மாப்பிள்ளையை ரெஸ்டாரண்டில் சந்தித்து முத்து – மீனா பேசி இருந்தார்கள். அவர் ரொம்ப எதார்த்தமாக நிறைய விஷயங்கள் பேசி சில கண்டிஷனை போட்டார்.
சிறகடிக்க ஆசை:
இந்த வாரம் மனோஜ், கடையில் வியாபாரமே ஆகவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த மனோஜ் நண்பர், பெரிய டீலர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள், பெரிய பணக்கார வசதியான குடும்பம் என்று சொன்னால் அந்த ஆர்டர் கிடைக்கும். கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று சொன்னவுடன் மனோஜ் பேராசைப்படுகிறார். ஆனால், ரோகினி வேணாம் என்று சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை. நம்முடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலரை வர வைத்து ஆர்டரை ஓகே பண்ணிடலாம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று ரோகினி சொன்னார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சீதாவும் அவருடைய அம்மாவும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த மீனா, மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறார். சீதா ஒருமுறை பார்த்து பேசி விட்டால் முடிவெடுக்கலாம் என்று சொல்ல சீதாவும் தயங்கி அமைதியாகவே இருந்தார். பின் மனோஜ்-ரோகினி இருவருமே வீட்டில் தங்களுடைய கல்யாண நாளை பற்றி பேச, வழக்கம்போல் கிண்டலாக முத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், திருமண நாளை கிராண்டாக கொண்டாட இருக்கிறேன். காரணம், டீலர் ஒருவர் மூலம் புது பிசினஸ் பண்ண இருக்கிறேன் என்று சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் மனோஜ், முத்து- ரவியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அதே போல் ரோகிணி, மீனா- சுருதியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், அந்த டீலரிடம் நாங்கள் வசதியான குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் உடை அணிந்து வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பத்தில் முத்து- ரவி இருவருமே தயங்கினார்கள். பின் தன் அண்ணனுக்காக ஒத்து கொண்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் சொன்னதை போலவே ரோகினியும் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு மீனா மறுக்கிறார். ரோகினையும் ஏதேதோ காரணத்தை சொல்லி பார்க்கிறார். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவே இல்லை. கடைசியில் முத்து ஒத்துக் கொண்டார் என்றவுடன் வேறு வழி இல்லாமல் மீனா ஒத்துக் கொள்கிறார். மறுநாள் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு முதலில் விஜயா அண்ணாமலை வருகிறார்கள். விஜயா பயங்கரமாக மேக்கப் செய்து சின்ன வயது பொண்ணு போல வருகிறார். அதற்குப்பின் ரோகினி-மனோஜ், சுருதி -ரவி ஜோடி வந்தார்கள். பின் முத்து-மீனா இருவருமே அழகாக இருந்தார்கள். ஆனால், ரோகினி எப்படியாவது இந்த பங்க்ஷனில் முத்து மொபைல் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய தோழியிடம் சொல்லி திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.