சத்யாவை தேடி அலையும் அருண் -முத்து, போலீசில் சிக்கினாரா சிட்டி? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
67
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-ரவி சொல்ல வருவதை மனோஜ் கேட்கவே இல்லை. அவர்கள் மீது தான் கோபப்பட்டு சென்றார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து, மீனா ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வா, என் அம்மாவிடம் கொடு என்று சொன்னவுடன் அண்ணாமலைக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது முத்து, ரோகினி விஷயத்தை சொன்னார். அதற்கு அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று விஜயாவை கேட்டார். உடனே ரோகினி, அத்தைக்கு எப்போது விருப்பமோ அப்போ கொடுக்கட்டும்.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் யாரும் தலையிட்டு குளிர் காயவேண்டாம் என்று சொல்லிவிடுவதால் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப் பெயர் மீனா தன் தோழிகளுடன் ஸ்கூட்டி வந்து கொண்டிருந்தார்.
மூன்று பேர் வருவதால் டிராபிக் போலீஸ் அருண், பைன் போட்டார். உடனே மீனாவை பார்த்ததும் அருண், நீ அந்த ரவுடி பொண்டாட்டி தானே என்று கேட்டதற்கு மீனா கோபப்பட்டார். பின் பயனை கட்டிவிட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் வேலை முடித்து விட்டு அருண், சீதாவை அழைத்து வர பார்க்கிறார். சீதாவே அங்கு வந்து விட்டார். அப்போது அவர், என் அக்காவிற்கு நம் விஷயம் தெரிந்து விட்டது என்று சொன்னவுடன் அருண் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மனோஜ் ஷோரூமில் வியாபாரம் ஆகவில்லை என்று தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு அவருடைய நண்பர், ரோகினி தான் உன்னுடைய லக்கி சாம். அவரால் தான் உன் வாழ்க்கை மாறியது என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, மனோஜிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். மனோஜ், என் அம்மா பார்த்தால் பிரச்சினையாகிவிடும். இங்கிருந்து கிளம்பு என்று சொன்னார். ரோகினி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. அழுது கொண்டே ரோகினி கிளம்பிவிட்டார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது போன் செய்த சீதா, சத்யாவை காணவில்லை, தேர்வு இருக்கிறது என்று ரொம்ப பதட்டமாக பேசினார். இதைக் கேட்டவுடன் முத்து ஷாக் ஆகிறார். பின் முத்து மீனாவிடம் எதுவும் சொல்லாமல் சத்யாவை தேடி தன்னுடைய நண்பருடன் சென்று விட்டார். சத்யா போகும் இடங்களுக்கெல்லாம் சென்று விசாரித்தார். ஆனால், யாருமே சத்யா வரவில்லை என்று சொன்னார்கள். அப்போது அங்கு வந்த மீனா, சத்யாவை பற்றி கேட்டார். முத்து உண்மையை சொல்கிறார். இதனால் மீனா ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் சிசிடிவி கேமராவில் சத்யாவை சிட்டி கடத்தி சென்றிருப்பதை பார்த்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சிட்டி தான் சத்யாவை கடத்தி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் முத்து எல்லா இடங்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். மீனா தன்னுடைய அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விடுகிறார். அவர் வேதனையில் அழுது புலம்பி கொண்டிருக்கிறார். பின் சீதா, அருணுக்கு கால் செய்து சத்யாவை கடத்தின விஷயத்தை சொன்னவுடன் அவரும் ஆறுதல் சொல்கிறார். பின் தனக்கு தெரிந்த போலீஸ் மூலம் சத்யா இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய சொல்கிறார் அருண். பின் அதை சீதாவிற்கு அனுப்புகிறார். சீதா உடனே முத்துவிற்கு லொகேஷனை அனுப்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

முத்து, சத்யா இருக்கும் இடத்திற்கு சென்று வருகிறார். அங்கு சிட்டி, சத்யாவை தேர்வு எழுத விடக்கூடாது என்று இன்ஜெக்ஷன் போட பார்க்கிறார். உடனே முத்து அந்த இடத்திற்கு சென்று சிட்டியையும் அவருடைய ஆட்களையும் அடித்து சத்யாவை காப்பாற்றி விடுகிறார். அதற்குப்பின் அருண் சொன்னதால் போலீஸ்மே அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். சிட்டியும் அவருடைய கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Advertisement