சீதா காதலிக்கும் நபர் யார் என்பது முத்துவிற்கு தெரிந்ததா? மோதலில் ஸ்ருதி,ரவி – சிறகடிக்க ஆசை

0
170
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நீத்து, தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். உடனே ஸ்ருதி, இதற்கெல்லாம் ரவியும் தான் காரணம் என்றவுடன் நீத்து ஒத்து கொள்ளவில்லை. என்னுடைய பிரமோஷன் தான் இவ்வளவு பிரபலத்திற்கு காரணம் என்றார். இதனால் நீத்து-சுருதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. அப்போது வந்த ரவி, இது ஒரு பெரிய விஷயம் இல்லை. இதற்காக எதற்கு சரி வாக்குவாதம் செய்கிறாய் என்று கேட்டார். ஆனால், சுருதி கோபப்பட்டு ரவியை தீட்டிவிட்டு இந்த வேலையே தேவையில்லை என்று வந்து விட்டார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ரோகினி, முருகனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டி இடம் நகை வாங்கப் போனார். அங்கு சிட்டி பணத்தை வாங்கிவிட்டு நகையை கொடுக்க, ரோகினியும் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பின் வந்த மேனேஜரிடம் சிட்டி கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு, சொன்ன உடனே எப்படி பணம் வந்தது பார்த்தியா? என்று நக்கலாக சிரித்தார். இன்னொரு பக்கம் சுருதி, ரவியை வேலைக்கு போக வேண்டாம் என்று சண்டை போட்டார். அப்போது சுருதி, நாம் சொந்தமாக ரெஸ்டாரன்ட் திறக்கலாம் என்றவுடன் ரவி இப்போது முடியாது என்று இருவரும் சண்டை போட்டார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் சுருதி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரவி வேலைக்கு கிளம்பினார். ஆனால், விடாமல் சுருதி வாக்குவாதம் செய்தார். அப்போது வீட்டிற்கு வந்த ரோகினி, சிட்டியிடம் வாங்கிய நகையை விஜயாவிடம் கொடுத்தார். ஆனால், விஜயா நகையை வாங்கவே இல்லை. ரோகினியை திட்டி கொண்டு தான் இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த முத்து, நகை யாருக்கும் வேண்டாம் என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் விஜயா, அது எனக்கு வாங்கிய நகை என்று பிடுங்கி எடுத்துக் கொண்டு உள்ளே போனார்.

சீரியல் ட்ராக்:

அதை பார்த்து ரோகினி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சீதா, அருண் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அருண், சஸ்பெண்ட் ஆன விஷயத்தை சொன்னவுடன், சீதா ஆறுதல் சொன்னார். அது மட்டும் இல்லாமல் எங்கள் வீட்டில் நம் காதலை சொல்லிவிடலாம் என்று சீதா சொல்வதால் அருண் சந்தோசப்பட்டார். பின் சீதா இதைப்பற்றி மீனாவிடம் சொன்னார். மீனாவும் அருணை சந்திக்க ஒத்து கொண்டார். பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் சீதா காதலிக்கும் விஷயத்தை சொன்னார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா, காதலிக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் முத்து கோபப்படுகிறார். உடனே மீனா, நல்ல பையன். சீதாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து சந்திப்போம். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று சொல்கிறார். அதனால் முத்துவும் அமைதியாகி விடுகிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு செயின் வாங்கித் தந்த விஷயம் பற்றி ரோகினி இடம் பேசுகிறார். ரோகினி, எனக்காக வீட்டில் பேசவே மாட்டாயா? எதற்காக இப்படி இருக்கிறாய்? என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு மனோஜ், என் அம்மா எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். நான் அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டேன். நான் சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் வளர்ந்தேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

ரோகிணி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சுருதி சொந்தமாக restaurant திறப்பதை பற்றி ரவியிடம் பேசுகிறார். ஆனால், அவர் கேட்கவே இல்லை. அதற்கு ரவி, என் சுயமரியாதையை விட்டு செய்ய முடியாது என்று சொல்கிறார். சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே ரவி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மறுநாள் முத்து-மீனா இருவருமே சீதா காதலிக்கும் நபரை சந்திக்க செல்கிறார்கள். கோவிலில் சீதா, அருண் இருவருமே முத்து-மீனா வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement