விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோபத்தில் விஜயா, ரோகினி -மனோஜ் இருவரையும் பேசவிடாமல் தடுக்கிறார். இன்னொரு பக்கம் சத்யா, ரோகினி செய்யும் தில்லாலங்கடி வேலை பற்றி சொல்ல, மீனாவிற்கு சந்தேகம் வந்தது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை இடம் ரோகினி மன்னிப்பு கேட்டார். அதற்கு அவர், என்ன சொன்னாலும் நீ செய்தது தவறு என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ரோகினி சாப்பிட வந்தார். ஆனால், விஜயா அவரை திட்டி விட்டார். எல்லோருமே ரோகினியை சாப்பிட சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.
நேற்று எபிசோடில், மீனா தனது டெக்கரேஷன் பிசினஸுக்காக புது மாடல்களை செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றார். பின் அதை மேனேஜரிடம் மீனா காண்பித்தார். அந்த சமயம் அங்கு வந்த, சிந்தாமணி, மீனாவை வம்பிழுத்து இருந்தார். அதோடு சிந்தாமணி ஆட்கள் மீனாவின் மாடல்களை எல்லாம் உடைத்து தூக்கி குப்பையில் போட்டு விட்டார்கள். உடனே கோபத்தில் மீனா எப்படியாவது நான் இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று அவர்களிடம் சபதம் போட்டார். மறுபக்கம், வீட்டிற்கு வந்த விஜயாவிடம் பார்வதி, ரோகினிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதோடு ரோகினிக்கு பணம் வந்தவுடன் மனோஜை தனியாக கூட்டிட்டு போய்விடுவார் என்பது போல் பயம் காட்டி இருந்தார் பார்வதி. பின், வேலையை முடித்துவிட்டு அண்ணாமலை வீட்டுக்கு வர, மீனா வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் கூறி வருத்தப்பட்டார். அந்த சமயம் வந்த விஜயா, மீனாவிடம் சண்டைக்கு போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, தப்பு செய்தது ரெண்டு பேரும் தான். ரோகினியை மட்டும் தண்டிப்பது சரி இல்லை. ரோகினி அடித்ததே தவறு. மனோஜ் உன் மகன் என்று நீ அவனுக்கு சப்போர்ட் செய்யாதே என்று அறிவுரை சொல்கிறார்.
நேற்று எபிசோட்:
இதை எல்லாம் கேட்டு விஜயாவும் மனம் மாறுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, வித்யாவின் வீட்டில் நடந்ததை நினைத்து அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த மனோஜிடம் விஜயா, ரோகினி போன் செய்தாளா? எங்கே இருக்கிறாய்? கூப்பிடு என்று சொன்னவுடன் அவரும் போன் பண்ணுகிறார். ஆனால், ரோகினி போன் எடுக்கவே இல்லை, மனோஜ் மீது இருந்த கோபத்தில் ரோகினி போனை எடுக்காமல் இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் பயந்து போன மனோஜ் தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் செய்து பேசி இருந்தார்.
அதற்கு பின் கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு ரோகினி வருகிறார். அப்போது தான் மனோஜுக்கு உயிர் மீண்டும் வருகிறது. பின் எல்லோரும் வீட்டில் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். அதை பார்த்தவுடன் ரோகினி ஷாக் ஆகிறார். அதற்கு பின் மனோஜ்- ரோகினி இருவரும் அண்ணாமலை-விஜயாவிடம் மன்னிப்பு கேட்டு பேசுகிறார்கள். கடைசியில் மனமிறங்கிய விஜயா ரோகினிக்கு அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மனோஜின் ஷோரூமை கவனிக்கும் பொறுப்பை தன்னுடைய அப்பாவிடம் ஒப்படைக்கிறார் முத்து. வீட்டில் யாராலும் எதுவுமே பேச முடியவில்லை. பின் ஷோரூமில் எல்லோரிடமும் முத்து, இனிமேல் அண்ணாமலை தான் இந்த கடையின் ஓனர் என்று அறிமுகம் செய்து வைத்து அவரை சீட்டில் உட்கார வைக்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயா, மனோஜ்க்கு பயங்கர கோவம் வருகிறது. பின்பு விஜயா, 27 லட்சம் பணத்தை கொடுத்து விட்டால் முத்துவின் கொட்டத்தை அடக்கி விடலாம். நீ எப்படியாவது உன்னுடைய மாமாவிடம் பேசி அப்பாவிடம் பணத்தை வாங்க ஏற்பாடு செய்ய என்று ரோகினி இடம் சொல்கிறார். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் பயத்தில் ரோகினி இருக்கிறார்.