விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மூன்று ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை வந்ததால் யாருமே பேசி கொள்ளவில்லை. பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பித்தார்கள். மூன்று ஜோடியுமே கோபத்தில் இருப்பதால் போட்டியில் சரியாக விளையாடவே இல்லை. கடைசி போட்டியில் வெற்றி பெறனும் என்று தங்களின் சண்டைகளை மறந்து பேசிக் கொண்டார்கள். ஒருவழியாக அவர்களுக்குள் இருந்த பஞ்சாயத்து முடிந்து விட்டது. பின் மீனா அந்த நடிகரின் வீட்டின் விசேஷத்திற்கு டெக்கரேஷன் வேலை எல்லாம் செய்தார்.
இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சிந்தாமணி, மீனாவின் டெக்கரேஷனை அடித்து நொறுக்குவது போல கனவு கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளும் நிஜத்திலும் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. பின் அந்த நடிகர் மீனாவின் வேலையை பார்த்து பாராட்டி கூடுதலாக சம்பளம் தந்தார். ஆனால், சிந்தாமணி வேலை சரியாக செய்யவில்லை என்று அவளை திட்டி அவருடைய சம்பளத்தையும் குறைத்து விட்டார். இதனால் சிந்தாமணிக்கு மீனாவின் மேல் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவரும் போலீஸ் மூலம் கதிர் வீடியோவை எடுக்க கோயிலுக்கு போனார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கோவிலில் கதிர் வீடியோவை சீதா வாங்கி கொண்டார். பின் முத்து, மலேசியாவில் வந்தவர்கள் நல்லபடியாக ஊருக்கு திரும்பி விட்டார்கள். மலேசியா ஜெயிலில் அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் ரோகிணி அப்பாவை காப்பாற்றி விடலாம் என்று மனோஜிடம் சொன்னார். உடனே கோபத்தில் ரோகினி, தேவையில்லாமல் தலை இடாதீர்கள் என்று திட்டி விட்டார். இதனால் முத்து-மீனா இருவருக்கும் ரோகினியின் மீது சந்தேகம் அதிகமானது. பின் மறுநாள் காலையில் பார்வதியிடம் ரோகினியை பற்றி இருவரும் விசாரித்தார்கள். ஆனால், அவருக்கு பெரிதாக அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.
நேற்று எபிசோட்:
அதன் பின் ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்று மீனா விசாரித்தார். வித்யா, மீனாவின் கேள்விக்கு மாத்தி மாத்தி பதில் சொன்னதால் மீனாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. பின் இதைப் பற்றி முத்துவிடம் மீனா சொன்னார். அதன் பின் சிந்தாமணி, நீ என்னிடம் வேலை செய். உனக்கு தேவையானதை செய்கிறேன் என்று சொன்னவுடன் மீனா முடியாது என்று அவரிடம் சவாலிட்டு வந்தார். அதன் பின் வீட்டிற்கு வந்த முத்து, நாம் எல்லோரும் மலேசியா செல்லலாம். எல்லா செலவையும் ரோகினி அப்பா பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் ரோகினி உள்ளுக்குள் ரொம்பவே பயப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து, மலேசியா போகலாம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை, எதற்கு வீண் செலவு வேண்டாம் என்று மீண்டும் சொல்கிறார். ஆனால், முத்து கேட்கவே இல்லை. ரோகினி, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, எதற்கு வீண் செலவு செய்கிறீர்கள்? நாம் எதற்கு மலேசியா போகணும் என்று சொன்னவுடன் முத்து, ரோகினியை சிக்க வைக்க போடும் திட்டத்தை பற்றி மீனாவிடம் சொல்கிறார். மீனாவும் ஒத்துக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம் ரோகினி, முத்து என் வீட்டை அசிங்கப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
மலேசியா யாரும் போக வேண்டாம் என்று அழுது டிராமா செய்கிறார். மனோஜ் அதை நம்பி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசுகிறார். உடனே மீனா, சம்மந்தியை நேரில் பார்த்து நலம் விசாரித்தால் தான் நல்லது என்று விஜயாவை உஸ் பேத்தி விடுகிறார். பின் எல்லோருமே மலேசியா போவதற்கு தயாராகிறார்கள்.
ரோகினி என்ன செய்வதென்று புரியாமல் வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மலேசியா மாமாவை வர வைத்த ரோகினி, இது தான் கடைசி முறை. உதவி செய்யுங்கள் நான் சொல்வது போல் எங்கள் வீட்டில் பேசுங்கள் என்று கேட்க, அவருமே ஒத்துக்கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.