விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்த பஞ்சாயத்து ஒருவழியாக தீர்ந்தது. ஆனால், அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். பின் முத்துவுக்கு, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும், அந்த பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டு கிளப்பி விடுகிறார். கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று புது வெடியை போட்டு விடுகிறார்.
இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜ், சாமியாரை பார்த்து நடந்ததை சொல்ல, அவர் சில பரிகாரங்களை செய்ய சொல்லி இருந்தார். மேலும், மீனா, வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க, எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்தார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் போனதால் மீனா வருத்தப்பட்டார். பின் முத்து புடவை வாங்கி கொடுத்து மீனாவை சமாதானம் செய்து விட்டார். இன்னொரு பக்கம், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதே கடைக்கு விஜயா சென்று இருந்தார். எப்படியோ ரோகினி சமாளித்து விட்டார். இந்த வாரம் ரோகினி, கிரிஷ் பிறந்த நாளிற்கு அவரை பார்க்க சென்றிருந்தார். அங்கு கிரிஷ் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ரோகினி செய்திருந்தார். அந்த சமயம் பார்த்து, முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்கிறார். பின் புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து பேசுகிறார்.
நேற்று எபிசோட்:
என்ன சொல்வது என்று புரியாமல் கிரிஷ் பாட்டி தவித்தார். இறுதியில் தனது மகள் பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்கிறார். ஆனால், ரோகினி தான் தன் மகள் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. ரோகினி என்று தெரியாமல் அவருக்கு ஆதரவாகவே முத்து பேசுகிறார். இருந்தாலும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய கடமை என்று அறிவுரை சொல்லி கிரிஷ் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள். அதற்கு பின் முத்து- மீனா கிளம்பியவுடன் ரோகினி வீட்டிற்கு வந்து, நீ அவர்களுடன் பேசாதே. கோபமாக பேசினால் அவர்கள் வரமாட்டார்கள் என்று சென்று விடுகிறார்.
முத்து-மீனா எடுக்கும் முடிவு:
இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கிரிசை தத்தெடுத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா கோயிலில் சீட்டு குலுக்கி போட வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்படுகிறார். ஆனால், முத்து அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் சேருவதால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் புதிதாக இரண்டு பேர் என்ட்ரி கொடுக்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்து, கிரிஷை தத்தெடுக்க போகிறேன் என்று வீட்டில் சொல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
இதை கேட்டு விஜயா, அனாதைப் பிள்ளைகள் வளர்ப்பதற்கு இது என்ன சத்திரமா? என்று கோபப்பட்டு கத்துகிறார். மீனா நடந்ததை சொல்கிறார். இருந்துமே விஜயா ஒத்துக்கொள்ளவில்லை. இதையெல்லாம் ரோகினி வெளியில் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் ரோகினி உள்ளே வந்த உடன் நடந்ததை விஜயா சொல்கிறார். இறுதியில் முத்து, கிரிஸ் பாட்டி சம்மதித்தால் கண்டிப்பாக நான் தத்தெடுத்துக் கொள்வேன் என்று சொல்கிறார். இனி வரும் நாட்களில் கிரிஷை முத்து தத்தெடுத்துக் கொள்வாரா? அவருடைய பாட்டி சம்மதிப்பாரா? ரோகினி என்ன செய்யப் போகிறார்? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.