-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

செய்யாத தவறுக்கு சிக்கி கொண்ட முத்து, கொந்தளித்த மீனா – அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

0
132

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், வெற்றிலையில் மை தடவி ஓட்டை போட்டு விட்டார். உடனே வீட்டில் உள்ளவர்கள் சிரிக்க, அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.மனோஜ்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது முத்து, கதிர் பண விஷயத்தை நானே கண்டுபிடிக்கிறேன் என்று சொன்னார். மறுநாள் காலையில் மனோஜிக்கு பிறந்தநாள் என்பதால் ரோகினி சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு அவருக்காக புது கார் வாங்கி தந்தார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் மனோஜ் பிறந்த நாளைக்கு கேக் வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு பவானியில் கல்யாணத்திற்கு அண்ணாமலையின் குடும்பமே சென்றது. அங்கு மலேசியா மாமா கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார். ஆனால், முத்து குடும்பத்தினர் அங்கு வந்திருப்பது அவருக்கு தெரியவே இல்லை. அண்ணாமலை குடும்பத்திலிருந்து ஒவ்வொருவரும் வருகின்ற தருணத்தில் எல்லாம் எப்படியோ மலேசியா மாமா அங்கிருந்து சென்று விட்டார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் பவானியின் கல்யாண வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்ணாமலையின் குடும்பத்தை பார்ப்பதற்காக மலேசியா மாமாவும் ரெடியாக இருந்தார். ஆனால், ஏதாவது ஒரு தடங்கல் வருவதால் அண்ணாமலை குடும்பத்தை மலேசியா மாமாவால் பார்க்க முடியாமல் போனது. பின் சுருதி தன்னுடைய மாமியாரை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு பின் ரோகினி சேர்ந்து கொண்டார். அப்போது மீனா வந்தவுடன் விஜயா கிளம்பி விட்டார். இதனால் மீனா வருத்தப்பட்டார்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

அதற்குப்பின் மாமியார், மருமகள்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்தவுடன் முத்துக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் முத்து தன்னுடைய அப்பா, சகோதரர்களிடம் அதை சொல்லி காண்பித்தார். எல்லோருமே சந்தோஷப்பட்டு சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் மாத்தி ஊற்றிக் கொண்டார்கள். அதை போட்டோவும் எடுத்தார்கள். பின் சமையல் செய்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மலேசியா மாமாவே இறங்கி சமையல் செய்தார். அந்த இடத்திற்கு முத்து தன்னுடைய அப்பாவிற்கு சூடு தண்ணீர் வாங்க வந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கல்யாண மண்டபத்தில் இரண்டு குடிகாரன்கள் குடித்துவிட்டு முத்துவின் மீது மோதிவிடுகிறார்கள். இதனால் முத்து மீது சரக்கு மொத்தம் கொட்டி விடுகிறது. பின் எல்லோருமே முத்து, தான் குடித்து இருக்கிறான் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். இதை பார்த்த மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்புகிறார். உடனே விஜயா ருத்ரதாண்டவம் ஆடுகிறார். பின் மீனாவிடம் அவர், அவன் செய்த வேலையை பார்த்தாயா? எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று வழக்கம்போல முத்துவை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் கொந்தளித்த மீனா, முத்துவிடம் சண்டை போடுகிறார். நீங்கள் திருந்தவே இல்லையா? என்று கத்துகிறார். முத்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க பார்க்கிறார். ஆனால், அதை மீனா-ரவி கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து சட்டையை மாற்றி இப்போது செக் பண்ணி பாருங்கள் என்றவுடன் ரவி செக் பண்ணுகிறார். ஆனால், வாசனை எதுவும் வரவில்லை. பின் தான் செய்த தவறை உணர்ந்து மீனா மன்னிப்பு கேட்கிறார். அப்போது அந்த குடிகாரர்களையும் காண்பித்த முத்து, இவர்கள் தான் இந்த வேலையை செய்தார்கள் என்றார். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news