விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஸ்ருதியை கழட்டிவிட்டு எஸ்கேப்பாக பல முயற்சி செய்தார். ஆனால், ஸ்ருதி விடாமல் அவருடன் தான் இருந்தார். பின் ரோகினியை செக் பண்ணி பார்த்த டாக்டர், அவருக்கு சொத்தைப்பல் இருக்கிறது. பிடுங்கிவிட வேண்டும் என்று சொன்னவுடன் ரோகினி பயந்து விட்டார். ஒரு வழியாக பல்லை டாக்டரும் பிடுங்கி விட்டதால் ரோகினிக்கு உண்மையிலேயே பல்வலி அதிகமாகி வீக்கம் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் கிளம்பி விட்டார்கள். அதற்கு பின் தான் ரோகினியும் வீட்டிற்கு வந்தார்.
பின் ஹாஸ்பிடல் நடந்ததை ஸ்ருதி சொன்னவுடன் எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், ரோகினி தப்பித்து விட்டோம் என்று இருந்தார். ரோகினி மொபைலுக்கு கால் வந்தது. அதை மனோஜ் எடுத்து பேச, அப்போது வாடகை கட்டவில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள் ரோகினி என்று திட்டி இருந்தார். மனோஜ்க்கு ஒண்ணுமே புரியவில்லை போனை வைத்து விட்டார். பின் மனோஜ், இதைப் பற்றி ரோகினி இடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே கோபத்தில் மனோஜ் பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கோபித்துக் கொண்டு மனோஜ் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் முத்து, மீனா சொன்னதை மீறி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை அறிந்தவுடன் மீனா கோபப்பட்டு முத்துவிடம் சண்டை போட்டார். இதனால் முத்து மொட்டை மாடிக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதி போன் செய்தும் ரவி வேலையில் பிஸியாக இருந்ததால் எடுக்கவில்லை. ஏன் போன் எடுக்கவில்லை? என்று கோபத்தில் ஸ்ருதி ரவியிடம் சண்டை போட, ரவியுமே மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார்.
நேற்று எபிசோட்:
மூன்று பேருமே மொட்டை மாடியில் திருமண வாழ்க்கை பற்றியும், பொண்டாட்டியால் நிம்மதி இல்லை என்றும் புலம்பி பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று எபிசோட்டில் மூன்று ஜோடிகளுமே கோபத்தில் இருந்தார்கள். கணவன்மார்கள் யாருமே மனைவியிடம் பேசவில்லை. அவர்களுமே தங்களுடைய கணவர்களிடம் பேசாமல் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த மூன்று ஜோடிகளுக்கும் இடையே சண்டை இருக்கிறது என்று அண்ணாமலை தெரிந்து கொண்டார். ஆனால், அவர்களுடைய பஞ்சாயத்தை கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
விஜயாவும் அண்ணாமலை சொன்னதைப் போலவே அமைதியாக இருந்தார். பின் வீட்டிற்கு வந்த பாட்டி, மூன்று ஜோடிக்குள் சண்டை இருப்பதை தெரிந்து கொண்டார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ரவியின் ஓனர், பொங்கல் கொண்டாட்டத்திற்கு போட்டிகள் நடப்பதால் எல்லோரையும் இன்வைட் செய்தார். பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறார்கள். மூன்று ஜோடியுமே தனித்தனியாக நின்று கொண்டிருந்தார்கள். பின் போட்டியில் ரோகினி, மீனா, சுருதி மூவருமே கலந்து கொள்ள, அதில் சுருதி ஆரம்பத்திலேயே அவுட்டாகி விட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து, மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லுங்கள். ரோகினி அப்பாவை பார்த்து வரலாம் என்று அண்ணாமலை இடம் சொல்கிறார். உடனே அவரும் சரி என்கிறார். இதனால் பயத்தில் ரோகினி, அப்பாவை ஜெயிலில் சந்திக்க வேண்டாம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மனோஜ் மனதை மாற்றும் அளவிற்கு பேசுகிறார். மனோஜ், மலேசியா எல்லாம் யாரும் போக வேண்டாம் என்று சொல்கிறார். உடனே மீனா, ஜெயிலில் இருக்கும் சம்மதியை பார்க்கவில்லை என்றால் தப்பாக பேசுவார்கள் என்று சொன்னவுடன் விஜயா, மலேசியாவுக்கு டிக்கெட் போடுங்கள் என்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் ரோகினி பயத்தில் இருக்கிறார்.