விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா-மனோஜ் இருவரும் மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி கண்டமேனிக்கு பேச, கோபத்தில் மீனா பெல்ட்டை எடுத்து வந்து மனோஜ்- ரோகினி- விஜயா மூவரையுமே சாரா மாறியாக அடித்தார். கடைசியில் அது மீனா கண்ட கனவு. அதை நிஜத்தில் நடந்தது போல மீனா நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார். அவர்கள் மூவருமே என்ன? எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு, மீனா எதுவுமே சொல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த முத்துவும் விழுந்து விழுந்து சிரித்தார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து கத்தி இருந்தார்.
இன்னொரு பக்கம் ரவி, சுருதிக்கு டைமன் மோதிரம் கொடுத்து சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், கோபப்பட்டு விஜயா திட்ட, ஸ்ருதி- விஜயா இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அதன் பின் ரோகினி, முத்துவின் மொபைலை எடுக்க அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார். இது தெரியாமல் முத்து-மீனா இருவருமே குடித்து விட்டார்கள். முத்து- மீனா இருவருமே நன்றாக அசந்து தூங்கி விட்டார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று மொபைலை எடுக்க ரோகிணி போக, அந்த சமயம் பார்த்து விஜயா வந்ததால் ஏதோ காரணம் சொல்லி ரோகினி சமாளித்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மொபைலை எடுக்க ரோகினி வெளியே வந்தார். அப்போது மனோஜ் வந்ததால் மீண்டும் அவரால் போனை எடுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் மனோஜ் கடையில், அவர் வைத்த பீம்பாய் அடியாட்கள் கூட்டிட்டு வந்து பணத்தைக் கேட்டு மிரட்டி இருந்தார். மனோஜ் பணம் கொடுக்காததால் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் அந்த ஆட்கள் எடுத்துக் கொண்டு சென்றார்கள். அதற்குப்பின் கோவிலில் சீதாவை பார்த்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்க, மீனாவின் அம்மா ஒத்து கொள்கிறார். இதை மீனாவிடம் அவர் சொல்லி சந்தோசப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
மேலும், இன்றைய எபிசோட்டில் சீதாவை பெண்பார்க்க வரும் விசயத்தை முத்துவிடம் மீனா சொல்கிறார். உடனே முத்து, அவள் படிக்கட்டும். இன்னும் ரெண்டு வருடம் கழித்து கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னார். அதற்கு மீனா, நல்ல இடம் பார்க்கலாம். அதற்குப் பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, முத்துவும் ஒத்து கொள்கிறார். பின் வீட்டில் மனோஜ், முத்துவால் என் கடையில் பிரச்சனை. கடை வியாபாரமே கெட்டுப் போனது என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதற்குப்பின் நடந்தை மனோஜ் சொல்ல, விஜயா பயங்கரமாக கோபப்பட்டார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் இந்த மாதம் பணம் கொடுக்க முடியாது என்று மனோஜ் சொல்ல, முத்து வாக்குவாதம் செய்கிறார். உடனே அண்ணாமலை, அடுத்த மாதம் சேர்த்து கொடு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் சீதா, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். வேளைக்கு போகணும் அப்புறம் பண்ணுகிறேன் என்று சொல்ல, எல்லோருமே அவரை சமாதானம் செய்கிறார்கள். அதற்குப்பின் பின் மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் சீதாவை பார்த்து பிடித்திருக்கிறது என்று சொல்ல, ஆனால் சீதா எதுவுமே சொல்லாமல் தயங்கி அமைதியாகவே இருக்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ரோகினியை பார்க்க வேண்டும் என்று வித்யாவிடம் தொல்லை செய்கிறார் பி ஏ. உடனே அவர் ரோகினிக்கு கால் செய்கிறார். ஆனால், ரோகினியின் போனை விஜயா எடுத்து பேசுகிறார். அப்போது வித்யா, பிஏ வந்து தொல்லை பண்ணுகிறான் என்று சொல்ல, அந்த சமயம் பத்து ரோகினி வந்து போனை வாங்கிக் கொள்கிறார். எப்போது பணம் தருகிறார் என்று பிஏ கேட்கிறார். ஆனால், விஜயா பக்கத்தில் இருந்ததால் ரோகினி ஏதோ சொல்லி சமாளிக்கிறார். அதை புரிந்து கொண்டு பிஏவும் எனக்கு பணம் சீக்கிரம் வேண்டும் என்று சொல்கிறார். ரோகினி பேசுவதை கவனித்த விஜயா, யார் அந்த பிஏ என்று கேட்கிறார். அதிர்ச்சியில் ரோகினி உறைந்தார்.