அதிரடியாக முத்துவை கைது செய்த போலீஸ், ரோகினி செய்த பித்தலாட்ட வேலை – அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

0
159
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நாம் எல்லோரும் மலேசியா செல்லலாம். எல்லா செலவையும் ரோகினி அப்பா பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று யோசித்த ரோகினி, மலேசியா யாரும் போக வேண்டாம் என்று அழுது டிராமா செய்தார். மனோஜ் அதை நம்பி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசி இருந்தார். இருந்தாலும் முத்து விடவே இல்லை. பின் ரோகினி என்ன செய்வதென்று புரியாமல் வித்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மலேசியா மாமாவை வர வைத்த ரோகினி, உதவி கேட்டார். அவருமே ஒத்துக்கொண்டார்.

-விளம்பரம்-

நேற்று எபிசொட்டில் முத்துவின் வீட்டிற்கு வந்த மலேசியா மாமா, தொழில் எதிரிகள் உன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள். அவருக்கு எல்லா சடங்குகளையும் முடித்து விட்டார்கள் என்று அழுதார். இதைக் கேட்டவுடன் ரோகினி, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின் நினைவு தெளிந்த ரோகினி கதறி கதறி அழுதார். இதையெல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது. வீட்டில் உள்ள எல்லோருமே ரோகினி நிலைமை நினைத்து வருத்தப்பட்டார்கள். பின் மலேசியா மாமா, நீ அங்கு போனாலும் உன்னை கொன்று விடுவார்கள். மலேசிய போகாதே, சொத்து உனக்கு வந்து சேரும் என்று சொன்னார். உடனே அண்ணாமலை, மலேசியா ட்ரிப்பை கேன்சல் செய்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

பின் மீனாவை பழிவாங்க விஜயாவிடம் நடனம் கற்று கொள்ள சேர்ந்தார் சிந்தாமணி. இன்னொரு பக்கம் ரோகினி, வித்யாவிடம் மலேசியா மாமா நடந்தை பற்றி பேசி கொண்டு இருந்தார். இதை கேட்ட மீனா, ரோகினியிடம் கோபப்பட்டு சண்டை போட்டார். ஆத்திரத்தில் ரோகினி கத்தி எடுத்து மிரட்ட, உடனே ரோகினி கையில் இருந்த கத்தியை வாங்கிய மீனா அவரை குத்தப் பார்த்தார். ஆனால், அது உண்மை இல்லை. ரோகினி கண்ட கனவு. உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் ரோகினி, வித்யாவிடம் புலம்புகிறார். அந்த சமயம் பார்த்து ரோகினியின் அம்மா வீட்டிற்கு வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் போட்டோவை எடுத்து வர சொல்லி இருக்கிறார். அவர் அம்மாவும் போட்டோவை கொடுத்து எதற்கு என்று கேட்க, வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் ரோகினி சொல்கிறார். பின் அவர், உண்மையை சொல்ல சொல்லி அட்வைஸ் செய்ய, கோபத்தில் ரோகினி தன் அம்மாவை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு தெரிந்த வயதான தாத்தா, பாட்டி இருக்கும் கடையை காலி செய்ய வேண்டும் என்று டிராபிக் போலீஸ் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் கெஞ்சி கதறி கேட்டு அழுகிறார்கள். அங்கிருந்த ஒரு போலீஸ் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அந்த வயதான பாட்டியை கீழே தள்ளி விடுகிறார்.

-விளம்பரம்-

போலீஸ்-முத்து சண்டை:

இதனால் அவருக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. உடனே கோபத்தில் முத்து, அந்த போலீசின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். பின் அங்கிருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். பின் முத்து அந்த அடிப்பட்ட பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று உதவி செய்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை காண்பித்து அழுகிறார். எல்லோருமே அவருடைய படத்தை பார்த்து எமோஷனலாக பேசி ரோகினிக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துவை கைது செய்கிறது.

சீரியல் ட்ராக்:

வழக்கம்போல் விஜயா நக்கலாக முத்துவை திட்டுகிறார். பின் நடந்ததை எல்லாம் மீனா சொல்கிறார். ஆனாலும், விஜயா முத்துவை தான் திட்டி பேசிக் கொண்டிருக்கிறார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்து-மீனா இருவருமே சென்றுவிடுவார்கள். அப்போது வந்த ரோகினி- மனோஜ் இருவரும் முத்துவை பார்த்து கிண்டல் செய்துவிட்டு போலீஸிடம் கதிர் வீடியோவை கேட்கிறார்கள். அவர்கள் முடியாது என்று மனோஜை கன்னத்தில் அறைந்து அனுப்பி விடுகிறார்கள். அதற்குப் பின் வந்த இன்ஸ்பெக்டர், முத்துவிடம் நடந்ததை விசாரிக்கிறார். பின் அவர், முத்து மீது தவறு இல்லை என்று அந்த டிராபிக் போலீசை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement