விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கேஸ் வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் பேச, அவர் முடியாது. ஆனால், முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்துவிட்டார். பின் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள் கேஸ். சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். முத்துவும் பணத்தை ரெடி பண்ண சொல்லி மும்முரமாக அலைந்து கொண்டிருந்தார். பின் முத்து, பணத்தை கொடுத்து வக்கீலிடம் கொடுத்து சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சி இருந்தார்கள் முத்து-மீனா.
இந்த வாரம் வக்கீல், விஜயாவை சந்தித்து பேசும்போது பணம் தருகிறோம் என்றார். முதலில் மறுத்த விஜயா, 2 லட்சம் வேண்டும் என்று சொன்னார். உடனே வக்கீல் ஒத்துக் கொண்டதால், கேசை வாபஸ் வாங்க விஜயா சம்மதித்தார். பின் இதைப் பற்றி வக்கீல் சொல்ல, முத்துவும் சந்தோஷத்தில் வீட்டில் எல்லோரிடம் சொன்னார். இதனால் எல்லோரும் சந்தோசப்பட, ரோகினி மட்டும் வருத்தப்பட்டார். விஜயா எப்படி வாபஸ் வாங்கினார் என்று சந்தேகத்தில் ரோகினி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மேலும், கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் தெரிந்த மீனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்தார். பின் வீட்டிற்கு சத்யா வந்ததால் முத்துவும் அவருக்கு ஆறுதலாக பேசி, அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயம் அறிந்த சிட்டி, கோபப்பட்டு எப்படியாவது சத்யாவை மீண்டும் பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று யோசித்தார். பின் ரோகினி இடம் பணத்தை வாங்க சிட்டி போன் செய்து கேட்க, ரோகினி எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்றார். பின் மீனா அம்மா குடும்பத்தினர் விஜயா இருக்கும் இடத்திற்கு போனார்கள்.
நேற்று எபிசோட்:
இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் அவர்களை பார்த்தவுடன் விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். பின் மீனா வீட்டில் உள்ள எல்லோருமே அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் மனமே இறங்கவில்லை. அவர் வழக்கம்போல் மீனா குடும்பத்தை ரொம்ப அசிங்கப்படுத்தி இருந்தார். ஒரு வழியாக முத்து, விஜயாவை வீட்டிற்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் தன்னுடைய அப்பா விவாகரத்து செய்ய இருப்பதாக சும்மா ஒரு பொய் சொன்னார். அதை நம்பி விஜயாவும் பயந்து வீட்டிற்கு போனார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா வந்தது நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் குறித்து எல்லோரும் கேட்க, வக்கீல் சொன்னது நியாயம் என்று பட்டது. அதனால் தான் வாங்கினேன். ஆனால், எனக்கு மீனா,அவருடைய குடும்பத்தின் மீது இருக்கும் கோபம் தீரவில்லை என்று பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மீனா இந்த வீட்ல இருக்கலாம். அவர் வீட்டிலிருந்து யாரும் இங்கே வரக்கூடாது என்று கேவலமாக பேசி இருக்கிறார். அண்ணாமலை, முத்து எவ்ளோ பேசியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு முத்து- மீனா இருவருமே சந்தோஷமாக பேசியும், பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் ரோகினி, பார்வதியை சந்தித்து விஜயா கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பற்றி போட்டு வாங்கினார். பார்வதி உளறி விடுகிறார். பின் விஜயா 2 லட்சம் வாங்கி இருந்த பணத்தை பார்வதி காண்பித்தவுடன் ரோகினி ரொம்ப சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இதை பார்த்து ஸ்ருதி-முத்து இருவருமே பாராட்டி இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.