விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் நம்முடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலரை வர வைத்து ஆர்டரை ஓகே பண்ணிடலாம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று ரோகினி சொன்னார். பின் மனோஜ்-ரோகினி இருவருமே வீட்டில் தங்களுடைய கல்யாண நாளை பற்றி பேச, வழக்கம்போல் கிண்டலாக முத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், திருமண நாளை கிராண்டாக கொண்டாட இருக்கிறேன். காரணம், டீலர் ஒருவர் மூலம் புது பிசினஸ் பண்ண இருக்கிறேன் என்று சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் மனோஜ், முத்து- ரவியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அதே போல் ரோகினி, மீனா- சுருதியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், அந்த டீலரிடம் நாங்கள் வசதியான குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் உடை அணிந்து வர வேண்டும் என்று சொல்ல, ஆரம்பத்தில் முத்து- ரவி இருவருமே தயங்கி இருந்தார்கள். பின் அவர்கள் தன் அண்ணனுக்காக ஒத்து கொண்டார்கள். மேலும், மனோஜ் சொன்னதை போலவே ரோகினியும் சொன்னார். அதற்கு மீனா மறுத்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் ரோகினையும் ஏதேதோ காரணத்தை சொல்ல மீனா ஒத்துக் கொண்டார். மறுநாள் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு அண்ணாமலை குடும்பம் வந்தார்கள். ரோகினி எப்படியாவது இந்த பங்க்ஷனில் முத்து மொபைல் எடுக்க வேண்டும் என்று தன்னுடைய தோழியிடம் சேர்ந்து திட்டம் போட்டார். டீலர் ஓனர் வந்தவுடன் அவரை மனோஜ் வரவேற்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். தன்னுடைய அப்பா பிசினஸ்மேன், அம்மா பரதநாட்டிய ஸ்கூல் நிறைய வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொன்னார். அதற்குப் பின் முத்து 50 கார் வைத்து ரன் பண்ணி இருப்பதாக சொல்ல, முத்துவும் ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தார்.
நேற்று எபிசோட்:
பின் நல்லபடியாக கேக் வெட்டி தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கொண்டாடி இருந்தார்கள். அதற்குப்பின் தன்னுடைய டீலிங்கை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. பின் முத்துவை வீட்டுக்கு மீனா அழைத்து சொல்ல பார்த்தார். ஆனால், ரோகினி அவர்களை தடுக்க நினைத்தார். நேற்று எபிசோடில், முத்தை குடிக்க வைத்து அவருடைய மொபைலை எடுக்க வேண்டும் என்று ரோகினி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
எல்லோருமே அவரை உஸ்பேத்தி விட, வேறு வழி இல்லாமல் முத்து குடித்து விட்டார். இதனால் ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு போனை எடுக்க திட்டம் போட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருமே குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். எப்படியாவது முத்து போனை வாங்க வேண்டும் என்று ரோகினி முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை. போதையில் முத்து, தாங்கள் பணக்கார குடும்பம் இல்லை என்று ஓனரிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் அவர், முத்துவின் நேர்மையை பாராட்டி இந்த டீலங்கை மனோஜிடம் கொடுக்கிறார். அதற்குப்பின் எல்லோருமே வீட்டுக்கு வருகிறார்கள். வரும் வழியிலேயே முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விடுகிறார். பின் இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி வெளியிலேயே தூங்க சொல்கிறார். பெண்களை மட்டும் வீட்டிற்குள் வர சொன்னார். மனோஜ் இடம் இருக்கும் போனை எடுக்க ரோகினி யோசிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது