விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, வீட்டில் நடந்ததை பற்றி பார்வதியிடம் சொல்லி இருந்தார். பின் இரண்டு லட்சம் வீட்டில் தான் இருக்கிறது என்று அத்தையிடம் சொல்லுங்கள் என்றவுடன் பார்வதி நம்பி விட்டார். வீட்டிற்கு வந்த ரோகினி பணத்தை மனோஜிடம் கொடுத்தார். அதை விஜயா, அண்ணாமலையிடம் கொடுத்தார். அப்போது பார்வதி போன் செய்து பணம் வீட்டில் தான் இருக்கு என்றார். இதை அறிந்த அண்ணாமலை, விஜயாவை திட்டிவிட்டு அறிவுரை சொன்னார்.
பின் முத்து-மீனா இருவருமே கணக்கு போட்டு இருந்தார்கள். அப்போது அந்த மூன்று லட்சம் ரூபாயை மீனாவின் அம்மா வீட்டில் கொடுக்க சொன்னார் முத்து. முதலில் மீனா மறுத்தாலும் பின் வாங்கி கொண்டார். அதை தொடர்ந்து மீதி இருக்கும் பணத்தை வைத்து கார் டீவு, வீடு கட்டுவது பற்றி எல்லாம் பிளான் போட்டார்கள். நேற்று எபிசோட்டில் ரோகினி, தன்னுடைய அம்மா, மகனையும் சென்னைக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் தங்க வைத்தார். இருந்தாலும், யாராவது பார்த்து விடுவார்களா? என்ற பதட்டத்திலேயே ரோகினி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் புது வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டார்கள். அதற்கு பின் ரோகினி, யாரிடம் பேசாதே, எங்கும் போகாதே, எங்கேயும் விளையாடதே , சீக்கிரமாகவே லைட் ஆப் பண்ணி தூங்கி விடுங்கள் என்று பல கண்டிஷன்களை போட்டார். இதனால் கடுப்பாக்கி அவருடைய அம்மா, இதற்கு எங்களை ஜெயிலில் போட்டிருக்கலாம் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்ய, எங்களை பார்க்க வராதே. போன் பண்ணாதே என்று முகத்தில் அடித்தது போல் பேசி இருந்தார் ரோகினி அம்மா. இதனால் முத்து ரொம்ப வருத்தப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் கிரிஸை ஸ்கூல் சேர்த்த போனார்கள். அந்த பள்ளியில் தான் அண்ணாமலை வேலை கேட்டு போனார். ஆனால், ரோகினி -அண்ணாமலை இருவருமே சந்திக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த முத்து, கிரிஷ் பாட்டி பேசியதை பற்றி சொல்லி புலம்பி இருந்தார். அப்போது மீனா, அவர்கள் இப்படி பேசும் நபரே கிடையாது. கிரிஷை பற்றி ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்க பார்க்கிறார்கள் என்று சொன்னார். இதையெல்லாம் கேட்ட ரோகினி ஷாக் ஆகி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினியை பற்றி எல்லா உண்மையும் தெரிந்து விஜயா-மனோஜ் இருவருமே பயங்கரமாக திட்டி அடிக்கிறார்கள். பின் வீட்டை விட்டு அவரை வெளியே தள்ளுகிறார்கள். ஆனால், அது ரோகினி கண்ட கனவு. பின் மனோஜ், ஒன்றுமில்லை தூங்கு என்று ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் மீனா பூ வியாபாரத்திற்கு செல்கிறார். அங்கு மீனாவை ஒருவர் பின் தொடர்ந்தே வருகிறார். இதனால் மீனா ரொம்ப பயந்து போய் ரோகினியின் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு ரோகினியின் தோழி முத்துவின் போனை வைத்துக்கொண்டு பார்த்திருக்கிறார். ஆனால், பதட்டத்தில் மீனா அதை கவனிக்கவில்லை.
சீரியல் ட்ராக்:
ரோகினி, போனை மீனா பார்த்துவிடுவார்கள் என்று பயந்துக் கொண்டிருக்கிறார். பின் ஒரு வழியாக மீனாவை அனுப்பிவிட்டு போனை மறைத்து வைக்கிறார் ரோகினி. இன்னொரு பக்கம் மீனாவை துரத்தி வந்த நபர் முத்துவின் நண்பருடைய தம்பி. அவர் முத்துவிற்கு அறிமுகமாகினார். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்வதாகவும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்து, இப்படியெல்லாம் நடந்து கொள். அந்த பெண் உன்னை ஏற்றுக்கொள்வார் என்று ஐடியா கொடுக்கிறார். ஆனால், தன்னுடைய மனைவியை தான் அவர் காதலிக்கிறார் என்று தெரியாமல் முத்து ஐடியா கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.