விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ மீனா தான் பணத்தை திருடி இருப்பாள் என்று விஜயா பழி போட்டவுடன் முத்து-அண்ணாமலை பயங்கரமாக கோபப்பட்டார்கள். இதை கேட்டு மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியலவில்லை, பயங்கரமாக அழுதார். எவ்வளவு சொல்லியும் விஜயா கேட்கவில்லை. பின் முத்து , உண்மையை கண்டுபிடிக்க பார்வதி வீட்டிற்கு போனார். அப்போது பார்வதி உண்மையை சொல்லி விட்டார். பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா தான் பணத்தை திருடினாள் என்று ஒரு ட்ராமா போட்டார். விஜயா, மனோஜ் நம்பிவிட்டார்கள். இருந்தாலும் மீனா எந்த தவறும் செய்யவில்லை என்று அண்ணாமலை உறுதியாக இருந்தார்.
வழக்கம்போல் மனோஜ்- விஜயா இருவருமே மீனாவை திட்டி பேசி இருந்தார்கள். கடைசியில் முத்து, மீனா பணத்தை எடுக்கவில்லை. இந்த எல்லா வேலையும் செய்தது அம்மா தான் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், விஜயா முடியாது என்றார். உடனே அண்ணாமலை, உன்னால் தான் முத்து-மீனா கஷ்டப்பட்டார்கள். அவர்கள் இழந்த மொத்த பணத்தையும் நீதான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு விஜயா முடியாது என்று மறுத்தார். இதனால் அண்ணாமலை அந்த பணத்தை தான் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரிடமே நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மனோஜிடம் பணத்தை கேட்க, அவர் இல்லை என்று மறுத்து விட்டார். பின் ரோகினி இடம் கேட்க, அவருமே ஏதேதோ காரணத்தை சொன்னார். உடனே விஜயா, மலேசியாவிற்கு டிக்கெட் போடு. உங்க அப்பாவை சந்தித்து பணம் வாங்கலாம் என்று சொன்னதற்கு ரோகினி ஷாக்காகி, நான் உங்களுக்கு பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று சொன்னார். பின் மனோஜ் இடம் ரோகினி பணம் கேட்க, பார்ட்டிலேயே செலவாகிவிட்டது என்று மனோஜ் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதமானது.
நேற்று எபிசோட்:
பின் பார்வதி வீட்டிற்கு சென்ற ரோகினி, வீட்டில் நடந்ததை பற்றி சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, பணம் காணாமல் போனதால் மீனா மீது தான் திருட்டுபழி வந்தது. நான் என்னுடைய தாலியை அடமானம் வைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணி இருக்கிறேன். இந்த இரண்டு லட்சம் வீட்டிலேயே தான் இருக்கிறது என்று அத்தையிடம் சொல்லுங்கள். பாவம் மீனா கஷ்டப்பட வேண்டாம் என்று நல்லவர் போல பேசுகிறார். அதையும் பார்வதியும் நம்பி விடுகிறார்.
இன்றைய எபிசோட்:
பின் வீட்டிற்கு வந்த ரோகினி பணத்தை மனோஜிடம் கொடுத்தார். அதை அவர் விஜயாவிடம் கொடுக்க, அவரும் அண்ணாமலையிடம் கொடுத்துவிட்டு இனிமேல் யாரும் என் மீது குறை சொல்ல வேண்டாம் என்கிறார் . முத்து-மீனா எதுவும் பேசவில்லை. அப்போது விஜயாவிற்கு போன் செய்த பார்வதி, பணம் வீட்டில் தான் இருக்கு என்று சொன்கிறார். இதை விஜயா சொன்னவுடன் அண்ணாமலை, முத்து எல்லோருக்குமே கோபம் வருகிறது. பின் பணம் கிடைத்துவிட்டது. ஆனால், மீனா மீது போட்ட பழி போகுமா? என்று சொன்னவுடன் விஜயா எதுவுமே பேசவில்லை.
சீரியல் ட்ராக்:
அதை அடுத்து அண்ணாமலை, விஜயாவை திட்டிவிட்டு அறிவுரை சொன்னார். அதோடு மீனாவிற்கு அப்பா இல்லை. ஆனால், அந்த இடத்தில் இருந்து நான் எதுவாக இருந்தாலும் செய்வேன் என்று சொன்னவுடன் மீனா அவருடைய காலில் விழுந்து அழுகிறார். பின் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். கடைசியில் முத்து-மீனா இருவருமே கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த மூன்று லட்சம் ரூபாயை மீனாவின் அம்மா வீட்டில் கொடுக்க சொல்கிறார். முதலில் மறுத்த மீனா பின் வாங்கி கொள்கிறார். அதை தொடர்ந்து மீதி இருக்கும் பணத்தை வைத்து கார் டீவு, வீடு கட்டுவது பற்றி எல்லாம் பிளான் போடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.