விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா- முத்து இருவருமே பவானி வேலை செய்த இடத்தில் விசாரித்தார்கள். பின் இருவருமே பவானியின் வீட்டில் அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். அப்போது பவானி வீட்டில் பேச மலேசியா மாமா வந்தார். ஆனால், அவர் உள்ளே வராமல் சென்று விட்டார். அதற்குப்பின் முத்து-மீனா, பவானியின் காதலன் வீட்டிற்கு சென்று நிலைமையை சொல்லி புரிய வைத்தார்கள். நல்லபடியாக பவானியின் காதலுக்கு இரண்டு வீட்டாருமே சம்மதித்து விட்டார்கள்.
இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்காக கையில் டாட்டூ போட்டார். இதை பார்த்து மனோஜ் ரொம்பவே எமோஷனல் ஆனார். பின் இதைப் பற்றி மனோஜ் வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே பார்த்து ஷாக் ஆனார்கள். நேற்று எபிசோட்டில் நடன வகுப்பிற்கு சிந்தாமணி, விஜயாவை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர், உங்கள் மருமகளை கைக்குள் வைக்க தெரியவில்லை. நீங்கள் வேஸ்ட், அவள் தான் புத்திசாலி. உங்களுக்கு திறமை இல்லை என்றெல்லாம் விஜயாவை உஸ்பேத்தி விடும் அளவிற்கு பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த விஜயா, எப்படியாவது மீனா பூக்கடையை போடா விடாமல் தடுக்கணும் என்று ஆவேசப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே பவானியை அவருடைய வீட்டிற்கு அழைத்து போனார்கள். பவானி அப்பாவும் திருமணத்திற்கு ஏற்றுக்கொண்டார். முத்து-மீனா சென்ற பிறகு மலேசியா மாமா, மாப்பிள்ளை வீட்டு சார்பாக வந்து பவானி வீட்டில் பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில்
மனோஜ்க்கு போன் செய்த சந்தோஷி, மலேசியாவில் ஆர்டர் விஷயமாக சில விஷயங்கள் தெரிய வேண்டும். உங்கள் மாமனாரிடம் விசாரித்து சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால், மனோஜ் ஏதோ காரணங்களை சொல்லி சமாளித்துவிட்டார்.
இன்றைய எபிசோட்:
பின் மனோஜ், இதைப் பற்றி ரோகினி இடம் சொல்ல, அவர் என்ன சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார். உங்கள் மாமாவிடம் சொல்லி சந்தோஷிக்கு உதவி செய்ய சொல்லு என்று மனோஜ் கேட்கிறார். ஆனால், ரோகினி பார்த்து கொள்ளலாம் என்று ட்ராக்கை மாற்றி விடுகிறார். முத்து-மீனா இருவருக்குமே ஜலதோஷம் அதிகமாக இருப்பதால் ஹாலில் உட்கார்ந்த ஆவி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வெளியே வந்த மனோஜ், கீழ இருந்து சுடுதண்ணி பாத்திரத்தை கவனிக்காமல் கால் வைத்து விட்டதால் அவருக்கு அடிபட்டது. இதனால் வீட்டில் கலவரமே வெடிக்கிறது.
சீரியல் ட்ராக்:
வழக்கம்போல விஜயா, மீனா- முத்துவை தான் திட்டுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி வேலை செய்யும் ஹோட்டலில் வைட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரால் அந்த வேலையை சமாளிக்க முடியவில்லை. பின் டிராபிக் போலீஸ் விதியை மீறி நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விடுகிறார். இதை பார்த்த முத்து, அவருடைய வண்டிக்கு பூட்டு போட்டு சாவியை வைத்திருக்கிறார். அதற்கு பின் வந்த போலீஸ் வண்டியை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். உடனே முத்து சாவி என்னிடம் இருக்கிறது என்று சொன்னவுடன் போலீஸ் அவரிடம் சண்டைக்கு போகிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு எதிராகவே முத்துவுக்கு ஆதரவாக பேசியுடன் அவரால் எதுவுமே பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், டிராபிக் போலீஸ் அருண் விதியை மீறி செய்த விஷயத்தை முத்து வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் அந்த போலீசை எஸ்ஐ கூப்பிட்டு வார்னிங் கொடுத்து இருக்கிறார். அப்போது அவர், என்ன அவசரமாக இருந்தாலும் விதி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். விதியை மீறியது உன் தவறு. மூன்று நாள் சஸ்பெண்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதனால் கோபத்தில் அருண், இந்த வேலை யார் செய்தார் என்று மட்டும் தெரிந்தால் அவரை சும்மா விட மாட்டேன் என்கிறார்.