சிந்தாமணி விரித்த வலையில் சிக்கிய விஜயா, மீனாவின் நிலைமை என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
225
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா ரவியின் ஹோட்டலில் நடந்த விபரத்தை சொன்னவுடன் ஸ்ருதி, தான் செய்த தவறை உணர்ந்தார். மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் எல்லோருமே ஸ்ருதி எங்கே? என்ன பிரச்சனை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, எந்த பதிலும் சொல்ல முடியாமல் ரவி திணறி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதி மண்டபத்திற்குள் வந்தார். பின் நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை ரவி- சுருதி இருவருமே கொண்டாடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ட்ராபிக் போலீஸ் ஹாஸ்பிடலில் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தார்.
அவர் அம்மாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அட்மிட் பண்ண சொன்னார்கள். ஆனால், அவருக்கு நேரம் இல்லாததால் தயங்கினார். உடனே சீதா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வேலையை முடித்துவிட்டு அம்மாவை அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் அந்த போலீஸ் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ரோகினி- சிட்டி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ரோகினி, சத்யா வீடியோ பற்றி முத்து தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் சிட்டி.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து தன்னுடைய நண்பர் செல்வத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதே ஹோட்டலுக்கு அந்த ட்ராபிக் போலீஸ் வந்தார். அவரை பார்த்தவுடன் முத்து, தன்னுடைய நண்பன் செந்தில் இடம் நக்கலாக அந்த போலீசை வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். உடனே கோபத்தில் அந்த போலீஸ் முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். செல்வம் சண்டையை விலக்கி விட்டார். இருந்தாலும் அந்த போலீசுக்கு முத்துவின் மீது கோபம் குறையவே இல்லை.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் சீதா, ஹாஸ்பிடலில் ட்ராபிக் போலீஸின் அம்மாவிற்கு உதவி செய்வது பற்றி வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் சத்யா, தன்னுடைய அக்காவிற்காக பெரிய ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்தார். இதை கேட்டவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். பின் இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொன்னார். பின் மீனா, அதற்காக காசு செலவாகும். ஐம்பதாயிரம் வரை தேவை என்று சொன்னவுடன் முத்து பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

நேற்று எபிசோட்டில் முத்து-மீனா இருவரும் ரவி, சுருதியை சந்தித்து பேசுகிறார்கள். பின் முத்து புதிய ஆர்டர் பற்றி பேசிக்கொள்கிறார். அப்போது மீனா, 50000 பணம் குறைவாக இருக்கிறது. எங்களுக்கு பணம் தேவை, ஆர்டர் முடிந்ததும் திருப்பி பணம் தந்து விடுகிறோம் என்று சொன்னவுடன் ஸ்ருதி- ரவி இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பணத்தை அனுப்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணி, விஜயாவிடம் நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணியின் ஆட்கள் போன் செய்து புதிய ஆர்டர் மீனாவுக்கு கிடைத்துவிட்டது என்று சொன்னவுடன் பயங்கரமாக கோவப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே கோபத்தில் சிந்தாமணி, மீனாவை பற்றி தப்புத் தப்பாக விஜயாவிடம் சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மாமியாரின் கொட்டத்தை அடக்கத்தான் வேலைக்கு போவதாக மீனா சொன்னது போல் சொல்கிறார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சிந்தாமணி, மீனாவுக்கு புதிய ஆர்டரை கிடைக்க விடாமல் பண்ணுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர் எப்போதும் மீனா உங்களுக்கு கீழதான் இருக்கணும் என்று விஜயாவை உஷ்பேத்தி விடுகிறார். கொந்தளித்த விஜயா, வீட்டிற்கு வந்து பயங்கரமாக மீனாவை திட்டுகிறார். என்ன பிரச்சனை என்று சொல்லாமல் மீனாவை மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி- அண்ணாமலை இருவருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement