விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பேய் ரூபத்தில் மீனா பயமுறுத்த, ரோகினி ரொம்பவே பயந்து அலறி இருந்தார். ஆனால், அதெல்லாம் ரோகினி கண்ட கனவு. இருந்தாலுமே, ரோகினி கனவில் இருந்து வெளிவராமல் கத்தி உருண்டு புரளுகிறார். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு பயமாகி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து ரூமுக்கு வர வைத்தார். அப்போதுமே ரோகினி பேய் மாதிரி தான் கத்திக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு சந்தேகம் வந்தது.
பின் அவர் ரோகினியை நார்மல் நிலைக்கு கொண்டு வந்து அவளை தூங்க வைத்தார். மனோஜ் பயந்து கொண்டே தான் தூங்கினார். இன்னொரு பக்கம் வீட்டில் நடந்ததை பார்வதியிடம் விஜயா சொன்னார். அப்போது வந்த ரோகினியை பார்த்தவுடன் பார்வதி மிரளுகிறார். ரோகினி அப்பாவுடைய ஆத்மா தான் வந்திருக்கும் என்று சொல்லி சாமியாரை வீட்டிற்கு வர வைத்தார்கள். அவர், விஜயாவை பார்த்தவுடன் மொத்த கெட்ட ஆத்மா இவருடைய உடம்பில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா, ரோகினிக்கு தான் பேய் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் சாமியார், பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்து ரோகினியை ஒரு வட்டத்திற்கு உட்கார வைத்தார். இவர் போலி சாமியார் என்று ரோகினி கண்டுபிடித்து வவிட்டார். ஆனால், வெளியில் உண்மை சொல்ல முடியாமல் தவித்தார். பின் அந்த சாமியார் பேய் ஓட்டுகிறேன் என்று ரோகினியை குச்சியால் அடித்தார். அவரும் வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தார். தொடர்ந்து இப்படியே மூன்று நாள் குச்சியால் அடிக்க வேண்டும் என்று மனோஜிடம் சொன்னார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப அவசரம் என்பதால் ட்ராபிக் வீதியை மீறி முத்து வண்டியை ஒட்டி சென்றார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ் முத்துவை பழிவாங்க வேண்டும் என்று முத்துவை துரத்தி சென்று சண்டை வாங்கி இருந்தார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி முத்துவின் வண்டி சாவியை பிடுங்கி விட்டார். இதைப் பற்றி முத்து, மீனாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். இதனால் முத்துவிற்கு கோபம் வந்து மீனாவிடம் சண்டை போட்டு சென்று விட்டார். அதற்குப்பின் மீனா, அந்த டிராபிக் போலீஸ் வீட்டிற்கு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, எஸ்.ஐ வீட்டிற்கு பூ கொடுப்பார். அப்போது அவர் எஸ்ஐ மனைவியிடம் நடந்ததை சொல்ல, அவருமே சரியும் என்று சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி தூங்கிக் கொண்டிருக்கிறார். சாமியார் சொன்னது போல அவருடைய காலில் குச்சியால் மனோஜ் அடிக்கிறார். தூக்கத்திலிருந்து எழுந்த ரோகினி, பயங்கரமாக கதறுகிறார். விஜயா, மனோஜால் எதுவும் பேச முடியாமல் மீண்டும் அவரை அடிக்கிறார். இதனால் கோபத்தில் ரோகினி கத்த, இரண்டு பேருமே பயந்து கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்துவிடம் எஸ்.ஐ நடந்ததை பற்றி விசாரித்தார். உடனே அவர், அவசரத்திற்காக தான் அவன் வந்தான். அவனை பழிவாங்க தேவையில்லாத வேலையெல்லாம் செய்யாதே என்ற டிராபிக் போலீஸிடம் திருப்பி சாவி கொடுக்க சொல்கிறார். முத்துவும் சந்தோஷப்படுகிறார். பின் எஸ்ஐ, இதே மாதிரி செய்யக்கூடாது . மீனா என் வீட்டில் பேசியதால் தான் நான் ஒத்துக் கொண்டேன் என்கிறார். மறுநாள் காலையில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக இன்விடேஷனை வீட்டில் கொடுக்கிறார்கள். அதில் விஜயா நடனம் ஆடுகிறார், டெக்கரேஷன் வொர்கிங் மீனா செய்கிறார் என்று சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.