விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, என்னுடன் வேலை செய்பவரின் மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது. அதனால் தான் என்னால உங்களிடம் தகவல் சொல்ல முடியவில்லை என்றார். அதற்குப்பின் டூரிஸ்ட் அசோசியேஷனிலிருந்து சிலர் முத்துவை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தார்கள். முத்துவின் குணங்களையும் அவர் செய்து வரும் நல்ல விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டு தங்களுடைய அசோசியேஷனில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதாக சொல்லி இருந்தார்கள். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். அதோடு அவர்கள் முத்துவை ரொம்பவே பெருமையாக புகழ்ந்து பேசி இருந்தார்கள். இதைக் கேட்டு அண்ணாமலை ரொம்பவே பெருமைப்படுகிறார்.

மனோஜின் ஷோரூமுக்கு வந்த ஜோதிடர், இங்கு ஒரு நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கிறது. அந்த நெகட்டிவ் வைப்ரேஷனே நீதான் என்றார். அதைக் கேட்டு ஷாக் ஆன மனோஜ், இப்படி சொல்கிறீர்கள்? என்றார். ஜோதிடர், நீங்க ரொம்ப கஷ்டத்தில் இருக்கீங்க. உன் வாழ்க்கை பின்னோக்கி செல்கிறது என்றார். அதற்கு மனோஜ், ஆமாம். அதை எப்படி சரி செய்வது என்று கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், உங்க பெயரை மாற்ற வேண்டும் என்றார். மனோஜ் ஒத்து கொண்டார். ஜோதிடர், உங்கள் பெயரை மாற்றினால் எல்லாமே சரியாக விடும். ஒரே நாளில் உங்கள் கடையில் கோடிக்கு மேல் வியாபாரமாகும்.
சிறகடிக்க ஆசை:
உங்கள் பெயருக்கு முன்னால் தான் வைக்கணும். பப்பரப்பா மனோஜ் என்று வையுங்கள். சூப்பராக இருக்கும். உங்கள் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்றார். அதைக் கேட்டவுடன் மனோஜின் முகம் சுருங்கிறது. ஜோதிடர், இனிமேல் உங்கள் எல்லோரையும் இப்படி தான் கூப்பிடனும் என்றார். இன்னொரு பக்கம் ரேகா-சத்யா இருவரும் கிராமத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கிராம மக்கள் எல்லோருமே ரேகா- சத்யா இருவரும் போட்டோ, ரீல்ஸ் எல்லாம் போடுவதைப் பார்த்து கோபப்பட்டு பாட்டியிடம் கம்ப்ளைன்ட் செய்தார்கள். பாட்டி, உங்கள் பிள்ளைகள் போனை பார்த்து கெட்டுப் போவதை விட இவர்கள் ஊரை சுற்றி பார்ப்பது மூலம் தான் கெட்டுக் போகிறார்களா? என்று திட்டி ஊர் மக்களை விரட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து ஜோதிடர் சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். விஜயாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் மனோஜ், என்னுடைய பெயரை பப்பரப்பா மனோஜ் என்ற அழைத்தால் என்னுடைய வியாபாரம் கோடி கணக்கில் போகும். தயவு செய்து வீட்டில் எல்லோரையும் அப்படியே கூப்பிட சொல்லுங்கள் என்கிறார். விஜயாவும் இதைப்பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். மனோஜ் உடைய புதிய பெயர் கேட்டவுடன் வீட்டில் உள்ள மொத்த பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இதனால் கொந்தளித்த விஜயா எல்லோரிடமும் சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:
முத்து, பப்பரப்பா மனோஜ் என்று கிண்டலாகவே சொல்லி கூப்பிடுகிறார். இன்னொரு பக்கம் கிரிஷ் ஸ்கூலில் ஒழுங்காக படிக்காமல், பொய் பேசுதல், ரவுடித்தனம் செய்கிறான், ஏமாற்றுகிறான் என்று புகார் கொடுக்கிறார்கள். இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, கிருஷிடம் விசாரிக்கிறார். ஆனால், கிரிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ரோகினி அம்மா, நீ ஒழுங்கா குழந்தையை கவனி. அவனை கண்டுகொள்ளாததால் இப்படி எல்லாம் செய்கிறான் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். ஆனால், ரோகிணி அதை கேட்டுக் கொள்ளவில்லை.






