தன்னுடைய வீட்டில் லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு போய் இருப்பதாக நடிகர் ரவி மோகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரவி மோகன். இவர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வேலை முடிந்ததுமே வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக பணிப்பெண் கணவர், மனைவியை தேடி ரவி மோகன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ரவி மோகன் வீட்டிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது. இதைப் பற்றி பணிப்பெண் தங்களுடைய கணவரிடம் சொல்லிருக்கிறார். இதை அடுத்து பணிப்பெண் உடைய கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன் பின் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து நடிகர்ரவி மோகனிடம் விசாரித்து இருக்கிறார்கள்.
ரவி மோகன் அளித்த புகார்:
போலீஸ் வந்தவுடனே நடிகர் ரவி மோகன் பணிப்பெண்ணை வீட்டுக்கு செல்ல அனுமதித்தார். இது தொடர்பாக பணிப்பெண்ணுமே காவல்துறையிடம் எந்த ஒரு தகவலையும் புகாரையும் அளிக்கவில்லை. இதற்கிடையில் நடிகர் ரவி மோகனுடைய தனி மேலாளர் கோகுல், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், நடிகர் ரவி மோகன் வீட்டிலிருந்து 10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ், 40,000 பணம் காணாமல் போகிறது. இதை அவருடைய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் திருடி இருப்பதாக கூறப்படுகிறது.

ரவி மோகன் குறித்த தகவல்:
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடிகர் ரவி மோகன் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார்.

ரவி மோகன் படங்கள்:
சுதா கொங்காரா இயக்கத்தில் வந்த பராசக்தி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து இவர் ஜீனி என்ற படத்தில் நடிக்கிறார். அதோடு இன்னும் சில படங்களில் ரவி கமிட்டாகி இருக்கிறார். தற்போது நடிகர் ரவி மோகன் அவர்கள் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் தன்னுடைய படங்களை எடுக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.






