முத்து சொன்ன வார்த்தையால் மனம் உடைந்த மீனா, அடுத்து என்ன? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

0
179
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தாங்கள் வாங்க இருக்கும் பங்களாவை பார்க்க ரோகினி- மனோஜ் இருவருமே போய் இருந்தார்கள். அதை பார்த்தவுடன் எப்படியாவது அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ரோகினி சொன்னார். புது பங்களாவை சுத்தி பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே பங்களா ஓனரிடம் அமௌன்ட் பத்தி பேசி இருந்தார்கள். அவர், ஐந்து கோடி மதிப்பு. உங்களுக்கு மூன்று கோடிக்கு தருகிறோம். அட்வான்ஸ் தொகையாக 50 லட்சம் கொடுங்கள் என்றார். உடனே மனோஜ் 30 லட்சம் தருகிறேன் என்றவுடன் அவரும் ஒத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

உண்மையில் அவர்கள் ஒரிஜனர் ஓனரே இல்லை. அவர்கள் அந்த பங்களாவில் வாடகை இருப்பவர்கள். மனோஜை ஏமாற்றி பணத்தை வாங்க பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆர்டரின் மூலம் தனக்கு கிடைத்த லாபத்தை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இங்கு சிந்தாமணி என்பவருக்கு தான் எப்போதுமே ஆர்டர் கிடைக்கும் என்று பயங்கமராக பில்டப் விட்டார். அந்த சமயம் பார்த்து மண்டபத்திற்கு வந்த சிந்தாமணி, ஆர்டர் கொடுக்காததால் மேனேஜரிடம் சண்டை வாங்கி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் மீனா, உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னவுடன் முத்துவின் முகமே மாறி இருந்தது. நேற்று எபிசோட்டில் மீனா, காலையில் எழும்போது இருந்தே முத்து காணவில்லை. அவர் தன்னிடம் சொல்லாமல் சென்றது நினைத்து கவலைப்பட்டார். இதை பற்றி மீனா, அண்ணாமலை இடம் கேட்க, அவருமே நான் முத்துவை பார்க்கவில்லை என்றார். அதற்குப்பின் மீனா, முத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தார். ஆனால், அவர்களுக்குமே முத்து பற்றி தெரியவில்லை.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, தன்னுடைய திருஷ்டி புகைப்படத்தை பார்த்து சண்டை போட்டார் . அதற்கு பின் மனோஜ் வாங்கும் புது பங்களா பற்றி பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து விஜயாவின், கிளாஸ்க்கு வரும் காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து ஓடிவிடலாம் என்றெல்லாம் பிளான் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவிற்கு ஃபோன் செய்து முத்துவை பற்றி சொல்ல, இருவருமே முத்து போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று விசாரித்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யா- மீனா இருவருமே எல்லா இடத்திலும் முத்துவை தேடி பார்த்தும் கிடைக்கவே இல்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து மீனா வருத்தப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை விசாரிக்க, அவர் எங்கேயுமே இல்லை என்று சொல்கிறார். அதன் பின் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு முத்துவிற்காக மீனா காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த முத்துவை பார்த்து அண்ணாமலை திட்டுகிறார். பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, ஏன் சொல்லாமல் போனீர்கள்? என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். உடனே முத்து, உன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அதற்காகத்தான் சவாரிப் போயிருந்தேன் என்று சொன்னவுடன் மீனா ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன் பின் மீனா கோபத்தில் சாப்பிடாமல் தூங்க போய் விடுகிறார். கடைசியில் முத்து, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement