விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தன் தந்தை இறந்து விட்டார் என்று ரோகினி ட்ராமா செய்தார். இதை மொத்த குடும்பமும் நம்பி விட்டது. ஆனால், முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது.
மீனாவை பழிவாங்க விஜயாவிடம் நடனம் கற்று கொள்ள சேர்ந்தார் சிந்தாமணி. இன்னொரு பக்கம் ரோகினி, வித்யாவிடம் மலேசியா மாமா நடந்ததை பற்றி பேசி கொண்டு இருந்தார். இதை கேட்ட மீனா, ரோகினியிடம் கோபப்பட்டு சண்டை போட்டார். ஆனால், அது உண்மை இல்லை. ரோகினி கண்ட கனவு. உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் ரோகினி, வித்யாவிடம் புலம்புகிறார். அந்த சமயம் பார்த்து ரோகினியின் அம்மா வீட்டிற்கு வந்தார்.
நேற்று எபிசோட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் போட்டோவை எடுத்து வர சொல்லி இருந்தார். அவர் அம்மாவும் போட்டோவை கொடுத்து எதற்கு என்று கேட்க, வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் ரோகினி சொன்னார். பின் அவர், உண்மையை சொல்ல சொல்லி அட்வைஸ் செய்ய, கோபத்தில் ரோகினி தன் அம்மாவை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு தெரிந்த வயதான தாத்தா, பாட்டி இருக்கும் கடையை காலி செய்ய சொல்லி டிராபிக் போலீஸ் மிரட்டி இருந்தார்கள். அவர்கள் கெஞ்சி கதறி அழுதும் ஒரு போலீஸ் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அந்த வயதான பாட்டியை கீழே தள்ளி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் அவருக்கு தலையில் அடிபட்டு விட்டது. உடனே கோபத்தில் முத்து, அந்த போலீசின் சட்டையை பிடித்து சண்டை போட்டார். பின் அங்கிருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தி இருந்தார்கள். பின் முத்து அந்த அடிப்பட்ட பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று உதவி செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை காண்பித்து அழுதார். எல்லோருமே அவருடைய படத்தை பார்த்து எமோஷனலாக பேசி ரோகினிக்கு ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துவை கைது செய்தது.
நேற்று எபிசோட்:
வழக்கம்போல் விஜயா நக்கலாக முத்துவை திட்ட, நடந்ததை எல்லாம் மீனா சொன்னார். ஆனாலும், விஜயா முத்துவை தான் திட்டி பேசிக் கொண்டிருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்து-மீனா இருவருமே சென்றுவிட்டார்கள். அங்கு வந்த ரோகினி- மனோஜ் இருவரும் முத்துவை பார்த்து கிண்டல் செய்துவிட்டு போலீஸிடம் கதிர் வீடியோவை கேட்டார்கள். அவர்கள் முடியாது என்று அனுப்பி விட்டார்கள். அதற்குப் பின் வந்த இன்ஸ்பெக்டர், முத்துவிடம் நடந்ததை விசாரித்தார். பின் அவர், முத்து மீது தவறு இல்லை என்று அந்த டிராபிக் போலீசை திட்டி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ், போலீஸிடம் ரகசியமாக ஒரு விஷயம் சொல்கிறார். இதை கேட்டவுடன் எல்லா போலீஸ்களும் அவரை அறைகிறார்கள். பின் இதைப் பற்றி முத்து கேட்ட உடன் பயங்கரமாக கூப்பிடுகிறார். ஆனால், என்ன விஷயம் என்று மட்டும் சொல்லவில்லை.
இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தாத்தா பாட்டியின் உறவினர் ஒருவர் வருகிறார். அவர், மன்னிப்பு கேட்டு அவர்களை அழைத்து செல்கிறார். இதை அறிந்த முத்து சந்தோஷப்படுகிறார். பின் அந்த தாத்தா, ஒரு கவரை முத்துவிடம் கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹாஸ்பிடல் நடந்ததை சொன்னவுடன் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ் செய்த வேலையை சொல்கிறார். இதை கேட்ட அண்ணாமலை கோவப்பட்டு அவரை அடிக்கிறார். ஆனால், மனோஜ் என்ன சொன்னார்? என்று புரியாமல் விஜயா டென்ஷன் ஆகிறார். பின் அந்த தாத்தா தந்த கவரை முத்து பிரித்து பார்க்கிறார். அதில் அவருடைய போன் இருக்கிறது. அதை பார்த்தவுடன் ஷாக் ஆகி தன்னுடைய தந்தையிடம் சொல்கிறார். இதையெல்லாம் ரோகினி ஒழிந்து நின்று கேட்டு ஷாக் ஆகிறார். பின் இதை பற்றி தன்னுடைய தோழி வித்யாவிடம் கேட்க, அவர் ஆரம்பத்தில் சமாளித்தார். பின் உண்மையை சொல்கிறார். இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வித்யா, ரோகினியை எதிர்த்து திட்டி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.