மலேசியா மாமாவால் முத்துவிடம் சிக்குவாரா ரோகினி? மீனா செய்த வேலை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
147
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, கிரிஷ், அவருடைய பாட்டியும் பள்ளிக்கு வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் முத்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கிரிஷ் இருக்கும் இடம் முத்துவுக்கு தெரியவில்லை. பின் பள்ளியில் நடந்ததை பற்றி தன்னுடைய மகள் ரோகினிக்கு போன் செய்து சொல்ல, அவர் ரொம்பவே பயந்து விட்டார். பின் ரோகினி தன்னுடைய நகைகளை எல்லாம் அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு செட்டில் செய்தார். இதனால் ஷோரூம் ப்ரச்சனை தீர்ந்தது.

-விளம்பரம்-

பின் முத்து டிரைவிங் ஸ்கூல் ஒன்று தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஆரம்பித்து இருந்தார். அதற்கு தன்னுடைய அப்பா பெயரையே முத்து வைத்திருந்தார். புது பிசினஸுக்காக பூஜை எல்லாம் மீனா -முத்து இருவரும் சேர்ந்து போட்டார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிந்தது. உடனே மனோஜ், உன்னுடைய பெயரை பிசினஸுக்கு வைக்கவில்லை என்று விஜயாவை ஏத்தி விட்டார். பின் அண்ணாமலை, ஆர்த்தி எடுத்து ஆசீர்வாதம் செய்ய சொன்னார். ஆனால், விஜயா மறுத்தார். அண்ணாமலை அறிவுரை சொன்னதால் விஜயா கோபத்திலேயே பூஜை செய்து இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் மீனா மாணவியாக சேர்ந்தார். இதை விஜயா- மனோஜ் இருவருமே கிண்டல் செதார்கள். அதற்குப்பின் சீதா ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாமல் வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ், அவரை வழிமறித்து ஹெல்மெட் போடாததற்கு பைன் கட்ட சொன்னார். அதற்கு சீதா, நான் தெரிந்தவள் தானே. இது என்னுடைய தோழியின் ஸ்கூட்டி என்று ஏதோ காரணம் சொன்னார். ஆனால், அவர் கோபமாக பைனை கட்டு என்று சொன்னவுடன் சீதாவும் முறைத்துக் கொண்டே பைனை கட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்குபின் முத்து வீட்டிற்கு வந்த அண்ணாமலையின் நண்பர், தன்னுடைய மகள் பவானி ஓடிப்போன விஷயத்தை சொல்லி கதறி அழுதார். முத்து,மீனா, அண்ணாமலை மூவருமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் பவானி காதலன் வீட்டிற்கு மலேசியா மாமா வந்தார். அவர், பெண்ணை பற்றி விசாரித்து உங்கள் மகனுக்கு கல்யாணம் செய்துவிடலாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தார். பிறகு மீனா- முத்து இருவருமே பவானி வேலை செய்த இடத்தில் விசாரித்தார்கள். அப்போது பவானி, தான் காதலித்த நபருடன் சென்ற விஷயம் தெரிந்தது.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் முத்து-மீனா இருவருமே பவானியின் வீட்டில் சென்று அவரின் காதலை அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார்கள். அவர்களுமே தன் மகளின் மீது இருந்த கோபத்தை விடுகிறார்கள். அப்போது பவானி வீட்டிற்கு பேச மலேசியா மாமா வருகிறார். அப்போது அவர், எதுவும் வாங்காமல் வீட்டிற்குள் எப்படி போவது என்று சென்று விடுகிறார். அதற்குப்பின் முத்து-மீனா, பவானியின் காதலன் வீட்டிற்கு சென்று நிலைமையை சொல்லி புரிய வைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அவர்களுமே ஏற்றுக்கொள்கிறார்கள் .நல்லபடியாக பவானியின் காதலுக்கு இரண்டு வீட்டாருமே சம்மதித்து விடுகிறார்கள். இதை பவானியின் காதலன் பெற்றோர்கள் மலேசியா மாவிற்கு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்காக கையில் டாட்டூ போடுகிறார். இதை பார்த்து மனோஜ் ரொம்பவே எமோஷனல் ஆனார். பின் இதைப் பற்றி மனோஜ் வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே பார்த்து ஷாக் ஆனார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement