விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மண்டபத்தின் ஓனர் பணத்தை மேனேஜரிடம் வாங்கி மீனாவிடம் கொடுத்துவிட்டார். பின் அவர், இனிமேல் இந்த மண்டபத்தின் பக்கமே உன்னையும், சிந்தாமணியும் பார்க்க கூடாது என்று திட்டி விட்டார். அதற்கு பின் இனிமேல் என்னுடைய மண்டபத்திற்கு வரும் எல்லா ஆர்டருக்கும் உனக்குதாம்மா என்று சொன்னார். சந்தோஷத்தில் மீனா அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பணம் வட்டிக்கு வாங்கிய பைனான்சியரை சந்தித்து நடந்ததை சொல்லி மீனா பணத்தை கொடுத்தார். பைனான்சியர், இனி உனக்கு எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுமா என்று சொன்னார்.
அதற்குப்பின் முத்துவிற்கு ஃபோன் செய்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்ல, அவர் ரொம்பவே ஷாக் ஆனார். உடனே முத்து, எனக்கும் சவாரி முடிந்துவிட்டது, நானும் வருகிறேன் என்று சொன்னார் அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு மாலை அணிவித்து அவர் செய்த சாகசத்தை வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் விஜயா ஷாக் ஆகிறார். மனோஜ் வழக்கம்போல முத்து,மீனாவை நக்கல் அடித்து பேசி இருந்தார். ஆனால், அண்ணாமலை திட்டி விட்டார். அதற்குப்பின் எல்லோருக்கும் முத்து ஸ்வீட் கொடுத்தார்கள். விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்துவின் வீட்டிற்கு செல்வம் அவருடைய மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். முத்து, அவர்களை சாப்பிட வைத்தார். இன்னொரு பக்கம் மனோஜ், வேலைக்கு டைம் ஆகிறது சாப்பாடு ரெடியா? என்று கேட்டார்ர். ரோகினி மீனாவிடம் கேட்க, அவர்கள் சாப்பிட்ட பின்னால் சாப்பிடட்டும் என்று சொன்னார். பின் கோபத்தில் ரோகினி, இதை மனோஜிடம் சொல்ல, அவர் ஆவேசமாக முத்துவையும் அவருடைய நண்பரையும் பற்றி தரகுறைவாக பேசி இருந்தார். இதனை கேட்ட முத்து, மெதுவாக பேசு. அவர்கள் சாப்பிடட்டும். எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறாய்? என்று கேட்டார்.
நேற்று எபிசோட்:
மனோஜ், யார் சொல்வதையும் கேட்காமல் ரொம்ப கேவலமாக எல்லாரையும் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்ட செல்வம் தன்னுடைய மனைவியை சாப்பிடாமல் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் கோபப்பட்ட முத்து, மனோஜை உட்கார வைத்து வாயில் சாப்பாடு போட்டு திணிக்கிறார். உடனே மனோஜ், என்னை கொல்ல தானே பார்க்கிறாய், நீ ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். இதனால் இன்னும் கோபத்தின் உச்சிற்க்கு சென்ற முத்து, கத்தியை எடுத்து மனோஜை குத்தப் போனார். பின் எல்லோருமே மனோஜ், முத்துவை தடுத்து விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் சுருதி, மனோஜ்-முத்து இடையே இருக்கும் சண்டையை தீர்ப்பதற்கு ஒரு கேமை விளையாட வைத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, டிரைவிங் கத்து கொள்ள முத்து வீட்டிற்கு வருகிறார். ஆனால், அது மீனாவின் வீடு தெரியாமல் சிந்தாமணி வந்து விடுகிறார். பின் அவர் மீனா, முத்துவை பார்த்தவுடன் கிளம்ப பார்க்கிறார். உடனே முத்து, உங்களுக்கும் மீனாவுக்கும் தான் போட்டி. எனக்கும் உங்களுக்கும் இல்லை. நான் நன்றாக சொல்லி தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், சிந்தாமணி பார்க்கலாம் என்று கிளம்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் வித்யா-ரோகினி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு கதிர் வருகிறார். அவரை பார்த்தவுடன் கோபத்தில் ரோகினி அவரிடம் சண்டை போடுகிறார். உடனே கதிர், ரோகினியை தள்ளி விட்டு தப்பித்து ஓடுகிறார். பின்னாடியே ரோகினியும் துரத்திக் கொண்டு செல்கிறார். ,ஆனால் கதிர் எப்படியோ எஸ்கேப் ஆகி விடுகிறார். பின் இதைப்பற்றி மனோஜிடம் ரோகினி சொல்கிறார். அதற்குப்பின் பார்வதிக்கு போன் செய்த ரோகினி, கதிரை பற்றி சொல்கிறார். உடனே அவர் சாமியார் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர் வெற்றிலையில் மை போட்டு தொலைந்து போன பொருள்களை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார்கள். இதை கேட்ட முத்து கிண்டல் அடிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.