என் வாழ்க்கையில் மறக்க முடியாத தீபாவளின்னா அது இது தான்- சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் சொன்ன விஷயம்

0
263
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் முத்து போனில் இருக்கும் சத்யா விடியோவை ரோகினி திட்டம் போட்டு எடுத்து விட்டார். இதை அவர் சிட்டியிடம் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் முத்து போனை காணவில்லை என்று தேடி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சத்யா வீடியோ உண்மை விஜயாவுக்கு தெரிய வந்து என்ன செய்ய போகிறார்? மீனா நிலைமை என்ன? போன்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறார். மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், instagram ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் சிறக்கடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. மேலும், சமீபத்தில் தான் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் தான். இவர் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

வெற்றி வசந்த் -வைஷ்ணவி காதல்:

முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை அறிவித்து இருந்தார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

-விளம்பரம்-

வெற்றி வசந்த் பேட்டி:

இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த ஜோடி, நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது‌. கூடிய விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக வெற்றி வசந்த் அளித்த பேட்டியில், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத தீபாவளி என்றால் அது கத்தி படம் ரிலீஸ் ஆன தீபாவளி தான். நானும் அப்பாவும் சனி -ஞாயிறு போய் படம் பார்த்து விடுவோம்.

மறக்க முடியாத தீபாவளி:

நான் மட்டும் தனியாக படத்துக்கு போக எங்க வீட்டில் விடவே மாட்டார்கள். அதே மாதிரி தான் தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைக்கும் எங்க வீட்டில் படத்துக்கு எல்லாம் போக மாட்டார்கள். பண்டிகை நாட்களில் வீட்டிலேயே எல்லோரும் ஒண்ணா இருக்கணும் என்று அப்பா சொல்லுவார். அந்த மாதிரி வந்த ஒரு தீபாவளிக்கு தான் கத்தி படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்துக்கு போவதற்காக அப்பாவிடம் தயக்கத்துடனே அனுமதி கேட்டேன். அப்போதான் அப்பா என்னை நம்பி தனியா முதல்முறையாக படத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த நாளில் எனக்கு இருந்த சந்தோஷம் சொல்லவே முடியாது. அதுக்கு பிறகு பலமுறை தனியாக படம் பார்த்து இருக்கிறேன். ஆனால், என்னால் மறக்க முடியாத ஒரு தீபாவளி என்றால் அதுதான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement