ரோகினி சொன்ன கதையை நம்பி மீனாவை அசிங்கப்படுத்திய விஜயா, கோபத்தில் முத்து- சிறகடிக்க ஆசை

0
389
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சத்யாவிற்கு பிறந்தநாளுக்கு போக கூடாது என்று முத்து சொல்லி இருந்தும் மீனா சென்று இருந்தார். இதை அறிந்த முத்து, மீனா மீது பயங்கரமாக கோபப்பட்டார். பின் குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை முத்து போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். மறுநாள் முத்துவிடம் மீனாவின் அம்மா, தங்கை இருவருமே மன்னிப்பு கேட்க, முத்து கோபமாக பேசி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பின் நிலைமை புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு அல்வா வாங்கி கொடுத்து மன்னிப்பு கேட்டார்.

-விளம்பரம்-

இருவரும் சந்தோசமாக பேசி சாப்பிடுவதை பார்த்து விஜயா வயிறு எறிந்தார். மேலும், சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா சென்றார். அந்த சமயம் பார்த்து ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்ததை மீனா பார்த்தார். உடனே சீதா, ரோகினியை பற்றி விசாரித்தார். அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. இதை அறிந்த மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். யார் எது சொன்னாலும் காதில் கேட்காமல் அமைதியாகவே இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

அப்போது வீட்டிற்கு ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொண்டு வந்து தந்தவுடன் விஜயா, ரோகினி கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று இனிப்பு கொடுத்தார். உடனே விஜயா, வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு அண்ணாமலை, ஸ்ருதி, ரவி எல்லோருமே வந்து முத்து செய்த சாதனையை புகழ்ந்தார்கள். கடைசியில் முத்து, தன்னுடைய காரில் ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருந்தது.

சீரியல் கதை:

இதை பலருமே பாராட்டி இருந்தார்கள். வழக்கம் போல் விஜயா கிண்டல் அடித்து ஊரில், காரில் எல்லாம் சாதனை நடக்கிறது. வீட்டில் எதுவும் இல்லை என்று சொன்னவுடன் அண்ணாமலை கூடிய விரைவில் நடக்கும் என்று சொல்கிறார். நேற்று எபிசோடில், ஸ்ருதி, ஏன் இப்படி இருக்கிறீர்கள்? முத்து ஏதாவது சண்டை போட்டாரா? என்று கேட்டதற்கு, ரோகினி இரண்டாவது முறை கர்ப்பமாக டெஸ்ட் எடுத்து இருக்கிறார் என்று மீனா சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் உறைந்து இருந்தார். இதை ஸ்ருதி, ரவியிடம் சொல்கிறார். ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொல்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசி இருந்தார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் கேட்டு சண்டை போட்டு, நீ இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தாயா? இது இரண்டாவது குழந்தையா? என்றெல்லாம் கேட்க ரோகினி பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அழுதார். கடைசியில் ரோகினி, ஆமாம், இது இரண்டாவது குழந்தை தான். முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது என்று ஒரு கதையை சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரோகினி சொல்வதைக் கேட்டு எல்லோருமே நம்பி விடுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

விஜயா அழுது ரோகிணிக்கு ஆறுதல் சொல்லுகிறார். பின் இது யார் சொன்னது என்று கேட்டதற்கு ஒவ்வொருவருமே மாற்றி மாற்றி பெயரை சொல்ல, கடைசியில் மீனாவின் பெயரில் வந்து நிற்கிறது. உடனே விஜயா, மீனாவை பயங்கரமாக திட்டி பேச, ரோகினியும் கூட சேர்ந்து திட்டுகிறார். கடைசியில் அண்ணாமலை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். பின் முத்து- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ரோகினி பற்றி ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருக்கிறது. ஆனால், அவர் மறைக்கிறார் என்று மீனா சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட ரோகினி பயந்து போய் தன் மாமியாரிடம், நான் வேறு வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement