நகையைப் பற்றி கேட்கும் முத்து, போலீசில் புகார் கொடுக்க சொல்லும் ஸ்ருதி, பயத்தில் மனோஜ், விஜயா- சிறகடிக்க ஆசை

0
441
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

-விளம்பரம்-

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிந்தது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். பின் விஜயாவும் மீனாவின் நகையை கொடுக்க, மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் கிபிட் வாங்க முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.

- Advertisement -

சிறக்கடிக்க ஆசை :

அண்ணாமலை, விஜயாவிடம் பேசி நகையை வாங்கி கொடுக்கிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தார். யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள். இது பற்றி தன் அப்பாவிடம் கேட்க முத்து நினைக்கிறார். பாட்டி, தன் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடட்டும். அதற்கு பின் கேட்காமல் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார் மீனா. ஆனால், அது மனோஜ் வேலை தான் என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார்.

பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்:

வீட்டில் பாட்டியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். பின் ஒவொரு ஜோடியும் என்ன பரிசு வாங்கி கொடுப்பது குறித்து பேசி இருக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று பாட்டி சொல்கிறார். எல்லோரும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ரோகினி பாட்டிக்கு மேக்கப் போட்டு விடுகிறார். பின் அண்ணாமலை வீட்டிற்கு இரண்டு ஐய்யர்களை கூட்டிட்டு வந்து கோயிலில் சாமிக்கு படைத்த புடவையை கொடுத்து சப்ரைஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் முத்து யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

வீட்டில் முத்து வராததை நினைத்து மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் பாட்டியிடம் எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். ஆனால், முத்து இல்லாமல் மீனா தனியாக நிற்கிறார். நேற்று எபிசோடில், வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மா வருகிறார். அவர் வந்த உடனே மீனா நகையை பார்த்து இது கவரிங் தானே, உன் புருஷன் உனக்கு தங்கத்தில் ஒரு நகையை கூட வாங்கி வைக்கவில்லையா? என்று கிண்டலாக பேசுகிறார். பாட்டியும், அண்ணாமலையும் சுருதி அம்மாவை திட்டுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், முத்து நகையை எடுத்து வந்து தனது அப்பாவிடம் காண்பித்து, இது எல்லாம் கவரிங் நகை என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

விஜயா, இது மீனாவின் வீட்டிலேயே மாத்தி தந்திருப்பார்கள். அவர்கள் தான் கவரிங் நகையை கொடுத்திருப்பார்கள் என்று சொல்கிறார். இதெல்லாம் எங்கள் வீட்டில் செய்யவில்லை என்று மீனா சொல்கிறார். உடனே சுருதி, போலீசில் புகார் கொடுக்கலாம் என்று சொன்னவுடன் மனோஜ், விஜயா பயப்படுகிறார்கள். இனி வரும் நாட்களில் கவரிங் நகை மாற்றியது யார் என்ற உண்மை வெளிவருமா? மனோஜ் -விஜயா முத்துவிடம் சிக்குவார்களா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement