fashion Show -வில் கேட் வாக் – சிறுத்தை படத்தில் வந்த குட்டி பொண்ணா இது. வைரல் வீடியோ.

0
2813
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை கார்த்தி, தமன்னா, சந்தானம், பேபி ரக்ஷனா, அவினாஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் தெலுங்கு மொழியில் வெளிவந்த விக்ரமர்குடு என்ற படத்தின் தழுவல். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி ரக்ஷனா திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 20200623_170621_0004.png

இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் வாயை பிளந்து உள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நடித்து வந்த ரக்ஷனா அவர்கள் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். இவர் சிறுத்தை படத்திற்குப் பிறகு ஓகே கண்மணி, பாண்டிய நாடு ,கடல் , த்ரிஷா இல்லனா நயன்தாரா , நிமிர்ந்து நில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அழகுப் போட்டி ஒன்று நடந்து உள்ளது. இதில் ரக்ஷனா கலந்து கொண்டுள்ளார். அழகு போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலரும் சிறுத்தை பேபி ரக்ஷணாவா!!! என்று கேட்டு வருகிறார்கள்.

பேபி ரக்ஷணா போல் சினிமா உலகில் பல பேர் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் மிகவும் அழகான கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் ரக்ஷனா கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement