விஸ்வாசம் படத்திற்கு பிறகு..சிவாவின் அடுத்த படம் இந்த மாஸ் ஹீரோ கூடவா..? ஒப்பந்தம் முடிந்தது.! வெளிவந்த தகவல்.!

0
710
Ajith

தமிழில் கார்த்திக் நடித்த “சிறுத்தை ” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. சிறுத்தை படத்தை தொடர்ந்து சிவா இயக்கிய மூன்று படங்களும் அஜித் ஹீரோவாக நடித்து வந்தார். தற்போது சிவா – அஜித் கூட்டணியில் 4 வது முறையாக “விஸ்வாசம் ” படமும் தயாராகி கொண்டிருக்கிறது.

ajith

- Advertisement -

இந்நிலையில் “விஸ்வாசம் ” படத்திற்க்கு பின்னர் இயக்குனர் சிவா ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஒப்பந்தம் “சிறுத்தை ” படத்தின் போதே போடப்பட்டது என்று ஏற்கனவே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் பணிகள் அடுத்த 2019 ஆம் ஆண்டு துவங்க இருப்பதாக தெரிகிறது.

-விளம்பரம்-

Allu Arjun

இயக்குனர் சிவா இயக்கவுள்ள இந்த புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதன் மூலம், முதன் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோர் நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement