சிவா நடிக்க மறுத்து அதில் விஜய் சேதுபதி நடித்து மெகா ஹிட்டான படம்.! இந்த படமா..?

0
916
Siva

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சாதிபதி நடிப்பில் வெளியான “நானும் ரௌடிதான் ” எனும் படம் மிக பெரிய கமர்சியல் படமாக ஹிட்டானது. நயன்தாரா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் என்று அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.

Vijay sethupathi

அது வேறு யாரும் இல்லை நம்ம அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா தானாம். இந்த படம் வருவதற்கு முன்பாக நடிகர் சிவா நடித்த ‘தமிழ் படம்’ ,’யா யா’, ‘தில்லு முள்ளு ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் காமெடி கலந்த கதையாக தான் இருந்து வந்தது.

அதே போல “நானும் ரௌடி தான்” என்ற படமும் ஒரு காமெடி கலந்த காதல் சப்ஜெக்ட் கதையாக தான் இருந்தது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க நடிகர் சிவாவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்கவே அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றுள்ளது.

ஒருவேளை நடிகர் சிவா இந்த படத்தில் நடித்திருந்தால் இது அவருக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும். அதே போல லேடி சூப்பர் ஸ்டார் நயத்தாரவுடனும் நடித்த ஒரு பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கும். இதே போல நடிகர் சிவா 2004 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “விசில் ” படத்திலும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.