தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

அது மட்டும் இல்லாமல் வசூல் வேட்டையும் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பு அட்ராசிட்டியாக இருக்கிறது. பலருமே ஸ்வாசிகாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு கிடைத்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகை ஸ்வாசிகா எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எல்லா தமிழ் மக்களுக்கும் வணக்கம். இந்த நிமிடத்தில் நன்றியை தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு வரவில்லை. அதை எப்படி வார்த்தையாக உங்ககிட்ட விமர்சிக்கனும் என்றும் தெரியவில்லை.
நூறு சாமி படம்:
என் மேல் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள். லப்பர் பந்து, மாமன் என நான் நடித்த எல்லா படங்களுக்கும் எனக்கு சப்போர்ட் கிடைத்தது. இப்ப நூறு சாமி படத்துக்கும் நீங்கள் கொடுக்கிற அன்பு ரொம்ப பெரியது. எப்படி என்னை நம்பி இவ்வளவு பேர் தியேட்டருக்கு வந்தீர்கள் என்று உண்மையாகவே எனக்கு தெரியவில்லை. சசி சார் எப்படி என் மேல் நம்பிக்கை வைத்து இவ்ளோ பெரிய கேரக்டர் கொடுத்தார். விஜய் ஆண்டனி சார் அதுக்கு எப்படி ஒத்துக்கிட்டாரு? என்றும் இன்னுமும் எனக்கு தெரியவில்லை. எல்லாமே எனக்கு ஒரு கனவு மாதிரி இருக்கிறது. ஆனால், இந்த நாளுக்காக தான் நான் இத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தேன்.

ஸ்வாசிகா வீடியோ:
நான் தாங்கி பிடிக்கிற ஹீரோயினியா நடிச்ச ஒரு படம் இத்தனை தியேட்டர்களில் ஓடுகிறது. அது இவ்வளவு பேர் ரசித்து பார்க்கிறார்கள். நான் ஒரு நாள் கூட இதை கனவு காணாம தூங்குனது இல்லை. இன்னைக்கு அது எல்லாமே நிஜமாக இருக்கிறது. தமிழ் ஆடியன்ஸ் எனக்கு பெரிய சப்போர்ட் கொடுக்கிறார்கள். இதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தையில் முடித்து விட முடியாது. என்னுடைய ஆக்சிஜன் இப்ப நீங்கதான். நீங்க கொடுக்கிற இந்த அன்புக்கு நான் எக்காலத்துக்கும் கடன் பட்டிருக்கிறேன். இனிமேல் இன்னும் பொறுப்போடு கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

எமோஷனல் பதிவு:
இந்த படத்துக்கு நீங்கதான் ஹீரோன்னு சொல்லி இப்ப நிறைய பேர் எனக்கு கால் பண்றாங்க மெசேஜ் அனுப்புகிறார்கள். உங்க எல்லோருக்குமே என் மனமார்ந்த நன்றிகள். நூறு சாமி என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு படம். இந்த படம் பேசும் விஷயங்களும் ரொம்ப முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு படத்துக்கு பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகையாக எனக்கு இதே மாதிரி எப்போதும் உங்களுடைய பாசத்தை கொடுங்கள். நான் கண்டிப்பாக இன்னும் கடினமாக உழைத்து உங்களை ஏமாற்றாமல் நிறைய நல்ல கேரக்டர்களில் நடிப்பேன் என்று கண் கலங்கியபடி பேசி இருக்கிறார்.






